பக்கம்:பொன் விலங்கு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 255

வைத்திருந்ததுபோல அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அவள். தமிழ் விரிவுரையாளராவது ஆங்கிலக் கவிதைக்கு அழகாக விளக்கம் சொல்வதாவது? என்று மாணவர்கள் மருண்டார்களோ என்னவோ? சத்தியமூர்த்தி அந்தப் புத்தகத்தில் கைக்குத் தோன்றிய பக்கமொன்றைப் பிரித்தான். சத்தியமூர்த்திக்கு மிகவும் விருப்பமான கவிதை ஒன்று அந்தப் பக்கத்தில் வந்து வாய்த்தது. வீ வாக்ஸ் இன் பியூட்டி என்று தொடங்கும் அழகிய கவிதை அது. பாரதியாரின் அழகுத் தெய்வம் என்ற கவிதையை அதனோடு ஒப்பிட்டு மாணவர்களுக்கு விளக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி, பைரனின் அந்தக் கவிதையை உணர்ச்சி வசப்பட்டு விளக்கிக் கொண்டிருந்தபோது, அவன் நினைப்பில் மோகினியின் நீர் பெருகும் விழிகள் தோன்றின. அவளுடைய சத்தியமானதுய அன்பு நினைவு வந்தது அவனுக்கு நட்சத்திரங்கள் நிறைந்த நிர்மலமான இரவு நேரத்து நெடு நீலவானத்தில் தனியாக மிதப்பதைப் போன்ற மோகினியின் தெளிவான அன்பை எண்ணினான் அவன். வீ வாக்ஸ் இன் பியூட்டி லைக் தி நைட் ஆப் க்ளெவுட்லெஸ் கிளைம்ஸ் அண்ட் ஸ்டாரி ஸ்கைஸ்' என்று அந்த வரிகளைக் கணிரென்று தொடங்கியதுதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன்பின் அவன் அந்தக் கவிதையில் தானே இரண்டறக் கலந்துவிட்டான். மோகினி யோடு பழகிய அழகிய அநுபவங்கள் அவனுடைய அந்தச் சொற்பொழிவை இணையற்றதாகச் செய்தன.

புகழோ பழியோ எதுவானாலும் இரண்டுமே ஒரு நல்ல மனிதனை அவன் இயல்பாக நடந்து βωσώaή கொண்டிருக்கிற நடையிலிருந்து சில விநாடிகள் தடுத்து நிறுத்தித் தயங்க வைத்துவிடக்கூடியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/257&oldid=595339" இலிருந்து மீள்விக்கப்பட்டது