பக்கம்:பொன் விலங்கு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 273

தேங்காய், பழமும் பூவும் இருந்த கூடை கீழே விழுந்துவிடும் போலக் கைகள் நடுங்கின. மனம் எதையோ எண்ணி யாருடைய ஞாபகத்திலோ பெரிதாகத் தவித்தது. இதற்குள் வரிசையில் நின்றிருந்த சிறுவன் அர்ச்சனைச் சீட்டோடு வந்து சேர்ந்திருந்தான். கூட்டத்தோடு கூட்டமாக கோவிலுக்குள் சென்றாள் மோகினி, மீனாட்சி சந்நிதியில் அர்ச்சனை முடிந்து, பிராகாரத்தில் சுற்றியபோது சத்தியமூர்த்தியின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்ட இடத்தில் மேலே நடக்கத் தோன்றாமல் சில விநாடிகள் தயங்கி நின்றாள் அவள். மனமும் கால்களும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் தயங்கின. 'உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வமாகிய் உங்களையும் தரிசனம் செய்த நேர்ந்தது என்று முன்பு கோவிலில் சந்தித்தபோது தான் அவனிடம் கூறியிருந்ததை நினைத்தாள் அவள். கோவிலில் ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்குவதற்காகக் கையெடுத்த போதெல்லாம் அவன் அன்போடு பரிவோடு தன்னைக் கைப்பற்றி அணிவித்த அந்த மோதிரம் கவனத்தில் பட்டதனால் வணங்கிக் கொண்டிருந்த தெய்வத்தின் ஞாபகத்தோடு வணங்க வேண்டிய தெய்வத்தின் ஞாபகத்தையும் சேர்த்து உண்டாக்கின. மனத்தில் தனியாக ஒடிக்கொண்டிருந்த நினைப்பைப்போல் அல்லது நினைப்பிற்கு ஏற்றாற்போல் புறத்திலும் தனியே ஒதுங்கிப் பிரிந்து நடக்க முடியாமல் மழையின் காரணமாக வந்தவர்கள் எல்லாம் வெளியேற முடியாது.போய்க் கோவிலில் கூட்டம் அதிகமா யிருந்தது. மழை நின்று அவள் சிறுவனோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு ஒன்பது-ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அப்போதும் கூடக் கண்ணாயிரமும் வந்தவரும் திரும்பிப் போக வில்லை. மேசை நடுவே வெற்றிலைப்பாக்கையும் வார்த்தை களையும் சுவைத்து மென்று தின்று கொண்டிருந்தார்கள் அம்மாவும் கண்ணாயிரமும் கைவிரல்களில் நகைக்கடை வைத்தமாதிரி விதம் விதமான கற்களில் மோதிரமும், சரிகைக்கரை மட்டுமே தெரிய மடித்த விசிறி மடிப்புப் பட்டு அங்கவஸ்திரமும், அடிக்கடி தோளில் நிற்காமல் நழுவுகிற அங்கவஸ்திரத்தை எடுத்து மேலே

பொ. வி - 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/275&oldid=595379" இலிருந்து மீள்விக்கப்பட்டது