பக்கம்:பொன் விலங்கு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

米 சமூகத்தின் அநுபவத்துக்குப் பொதுவான ക, ഞ, ുക. ♔ எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவிலிருக்கிற மருந்து மரத்தைப் போன்று

பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழ்கிறார்கள்.

குத்துவிளக்கு காரியாலயத்தின் உள்ளே சகல விதமான இருட்டுக்களும் உண்டாயினும் மேலுக்கு என்னவோ பிரகாசமான விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அந்தக் காரியாலயத்தில் எந்த இடத்தில் எதற்காக எப்போது வெளிச்சமாக இருக்கும் என்பதும் எந்த இடத்தில் எதற்காக எப்போதும் இருட்டாக இருக்கும் என்பதும் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியும். குமரப்பன் அந்தப் பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல; சமயா சமயங்களில் போட்டோகிராபராகவும் ரிப்போர்ட்டராகவும் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு கைகளையும் தாராளமாக வீசிக்கொண்டு நடக்கிற நடையிலே வழியில் நிற்கிற நாலுபேரை ஒதுங்கச் செய்துவிடுகிற சாமர்த்தியசாலி அவன். சுற்றி இருக்கிறவர்களுடைய மனத்தின் இருளை நன்றாகப் புரிந்துகொண்டு பட்டும்படாமலும் பேசிக் கூர்மையான வார்த்தைகளால் அவர்களை நேருக்குநேரேயே தாக்கிக் கூறிவிட்டுச் சிரிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன்தான். துணிவும் அந்தத் துணிவை விட்டு நீங்காத ஒரு வித வேதாந்த மனப்பான்மையும் உடைய தைரியசாலி அவன். எப்போதும் யாரையும் எதற்காகவும் பொய்யாக மதிப்பதோ, பொய்யாகப் புகழ்வதோ அவனுக்குப் பிடிக்காது. அன்று காலையில் குமரப்பன் அலுவலகத்துக்கு வந்ததும் நாட்டியக் கலைமணி குமாரி மோகினியைப் பேட்டி கண்டு வருவதற்காகப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/280&oldid=595391" இலிருந்து மீள்விக்கப்பட்டது