பக்கம்:பொன் விலங்கு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 279

வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்கள். குமரப்பனையும் அந்தப் பத்திரிகையின் கலை விமரிசனப் பகுதிகளைக் கவனித்துக்கொள்ளும் ஓர் உதவி ஆசிரியரையும் மோகினியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகக் கண்ணாயிரம் தயாராக வந்து காத்துக் கொண்டிருந்தார். குமரப்பனைக் கண்டாலே கண்ணாயிரத்துக்கு எப்போதும் பயம் உண்டு. அந்தப் பயம் தமக்கு இல்லை என்பதை நிரூபித்துக்கொள்ள முயல்கிறவரைப்போல் குமரப்பனிடம் கலகலப்பாகப் பேச முயன்று, அப்படிப் பேசியதன் காரணமாகவே அந்தப் பயத்தை அதிகமாக்கிக்கொண்டு போய்ச் சேருவது அவர் வழக்கம், வெளிப்படையாகத் தைரியசாலியாக இருப்பதைப்போல் காண்பித்துக் கொண்டே அந்தரங்கமாக கோழைத்தனத்தை வளர்த்துக் கொள்கிற நுணுக்கமான கோழை என்று அவரைப் பற்றித் தீர்மானம் செய்திருந்தான் குமரப்பன். கண்ணாயிரம் அன்றும் அவனை விசாரித்துக் கொண்டே வந்து சேர்ந்தார். t -

"என்ன குமரப்பன்? எப்படி இருக்கிறீர்கள்?' என்று அவர் விசாரித்தவுடன், "மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்கிற உரிமையே உங்களைப் போன்றவர்களிடம் விடப்பட்டிருக்கும்போது நீங்களெல்லாம் இப்படி விசாரிக்கலாமா சார்?' என்று சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு மறுமொழி கூறினான் குமரப்பன். இந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தத்தினால் கெளரவமாகத் தாக்கப்பட்டுவிட்ட கண்ணாயிரம் மேலும் பேசும் சக்தியை இழந்துவிட்டார். மோகினியின் வீட்டில் போய்ப் பேட்டி காண்பதற்காக உடன்வர இருந்த உதவியாசிரியர் கண்ணாயிரத்துக்கு மிகவும் வேண்டியவர். காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது கண்ணாயிரத்தை வாய் ஓயாமல் துக்கிவைத்துப் புகழந்துகொண்டே வந்தார் அந்த உதவி ஆசிரியர். 'எல்லாரையும் புகழ்கிறவன் யாரோ அவன் எல்லாராலும் புகழப்படுவான் என்று ஒருசித்தாந்தம் உண்டு. அந்தச்சித்தாந்தப்படி புகழை ஏற்படுத்திக்கொண்ட உதவியாசிரியர் அவர். அந்தக் காரில் அவர்களோடு காமிராவும் கையுமாகப் போய்க் கொண்டிருந்த குமரப்பன், பொறுமை இழந்திருந்தான். குமரப்பன் ஒன்றும் பேசாமலேயே குறும்புத்தனமான மெளனத்தோடு உடன்வருவதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/281&oldid=595393" இலிருந்து மீள்விக்கப்பட்டது