பக்கம்:பொன் விலங்கு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பொன் விலங்கு

வீட்டில் சகல கலைகளுக்கும் அதிதேவதையாகிய கலைமகளே வந்து அடைபட்டுக் கிடப்பதுபோல் அவள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்குப் புரிந்தது. மோகினியைப் பேட்டி காண்பதற்காகத்தான் அவர்களை அழைத்து வந்திருந்தார் கண்ணாயிரம். ஆனால், எல்லாவிதமான பேச்சு வார்த்தைகளுக்கும் கண்ணாயிரமும், முத்தழகம்மாளுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேசாமல் வீற்றிருக்கும் அழகிய சித்திரத்தைப்போல் குனிந்த தலை நிமிராமல் வீற்றிருந்தாள் மோகினி. பேட்டி காண வந்திருந்த உதவி ஆசிரியர் கண்ணாயிரத்துக்குக் கட்டுப்பட்டுக் கேள்விகளை எழுதிக்கொண்டு வந்திருந்தார் போலிருக்கிறது. மெளனமாகவே இருந்த மோகினி சில கேள்விகளுக்கு அம்மாவும் கண்ணாயிரமும் கூறிய மறுமொழிகளை எதிர்த்துச் சீறினாள்.

"நாட்டியக் கலையில் நீங்கள் செய்து முடிக்க விரும்புகிற உயர்ந்த சாதனை எதுவோ?"-என்று ஒரு கேள்வி இருந்தது. அந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் சேர்ந்து பதில் சொல்லும்போது, திரைப்படங்களில் நடிக்க வேண்டும்உலகமெல்லாம் சுற்றுப் பயணம் செய்யவேண்டும் என்று ஏதேதோ ஆசைகளை வெளியிட்டார்கள். தானே நடுவில் குறுக்கிட்டுப் பேசி மோகினி அதை மறுத்தாள்.

"உங்கள் கேள்விக்குப் பதில் இப்படி எழுதிக் கொள்ளுங்கள்: என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை நான் அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும். ஊர் சுற்றுவதையும் சினிமாப் படங்களில் நட்சத்திரமாக மின்னுவதையும் சாமர்த்தியங்களாக நினைக்கலாம். ஆனால் சாதனையாக ஒப்புக்கொள்ள முடியாது'-என்று மோகினி கூறிய போது கண்ணாயிரம் மறுத்து விவகாரம் பேசினார்.

'அப்படியெல்லாம் புரியாத பதில்களைச் சொல்லாதே மோகினி இந்தப் பேட்டியில் வெளிவருகிற ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு நல்ல விளம்பரமாக இருக்கவேண்டும். தயவுசெய்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிற பொறுப்பை என்னிடமும் அம்மாவிடமும் விட்டுவிட்டு நீ பேசாமல் உட்கார்ந்திரு. இதெல்லாம் நம்மைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/284&oldid=595399" இலிருந்து மீள்விக்கப்பட்டது