பக்கம்:பொன் விலங்கு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பொன் விலங்கு

என்று தெரிந்தால், இதுவரை இங்கு பிடித்த புகைப்படங்களெல்லாம் வீணாகிவிடும். புதிதாக உங்களையும் இந்த அம்மாளையும் படம் பிடித்து வெளியிட்டு விடலாம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்" என்று விநயமாக விசாரிப்பதுபோல் குறும்புத்தனமாக விசாரித்தான் குமரப்பன் இந்தக் கேள்விக்குப் பின்பு கண்ணாயிரம் விழித்துக் கொண்டார்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ அவளுக்குப் பதில் சொல்ல முடியாத கேள்விகளை நாங்கள் சொல்லி விளக்கியிருப்போம். எங்களுக்குள் நாங்கள் வித்தியாசமாகப் பழகவில்லை குமரப்பன் மோகினி பதில் கூறினாலும் ஒன்றுதான், நாங்கள் பதில் கூறினாலும் ஒன்றுதான். நீங்களாகத்தான் அநாவசியமான வேறுபாட்டை உண்டாக்கிப் பேசுகிறீர்கள், எங்களுக்குள் ஒரு வேறுபாடும் கிடையாது." ... . . -

"இருக்கலாம். ஆனால் மோகினியின் நாட்டியத்தை மோகினியிட மிருந்துதான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மோகினிக்குப் பதிலாக அதையும் இன்னொருவர் ஆடிவிடமுடியாது."

குமரப்பனின் இந்த வாக்கியத்தை வெறும் நகைச்சுவையாக ஏற்றுக் கொண்டு சிரிக்கிறவரைப்போல் சிரித்துவிட்டு அந்தச் சிரிப்பின் மூலம் தனக்குக் கிடைத்த தீவிரமான தாக்குதலை மறைத்துக்கொள்ள முயன்றார் கண்ணாயிரம். மானமும் சுயமரியாதையும் உள்ளவர்கள்தான் விருப்பு வெறுப்புக்களைத் தயங்காமல் எதிர்பார்த்துத் தைரியமாக ஏற்றுக் கொள்வார்கள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களோ எல்லாவற்றையும் துடைத்துவிட்டு வாழ்கிறவர்கள். எவ்வளவு கூர்மையான வார்த்தைகளால் தாக்கினாலும் தங்களுக்கு ஒன்றுமில்லை என்பதுபோல் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்துவிடுகிற தன்மை உடையவர்களை என்ன செய்ய முடியும்? எந்த வார்த்தைகளால் தாக்க முடியும்? -

"ஏதேது? போட்டோக்காரர் ரொம்பப் பொல்லாதவராக இருப்பார் போலிருக்கே?' என்று அப்பொழுதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தவளாகமுத்தழகம்மாள் ஏதோ சொல்லி வைத்தாள். குமரப்பனின் கைவசம் காமிரா இருந்ததனாலும், அவன் படங்கள் பிடித்ததனாலும் தானாகவே அவனுக்கு பேர்ட்டோக்காரர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/286&oldid=595403" இலிருந்து மீள்விக்கப்பட்டது