பக்கம்:பொன் விலங்கு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - பொன்விலங்கு

நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று சத்தியமூர்த்திக்குப் பக்கத்தில் இந்த மனிதன் அமர்ந்திருப்பதை நினைவுகூர்ந்தாள் அவள்,

மனத்தினால் வெறுத்துக்கொண்டே வாய் வார்த்தையால் புகழ்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குமரப்பனுக்குத் தெரியும். கண்ணாயிரம் இருந்தாற் போலிருந்து தன்னையும் சத்திய மூர்த்தியையும் பற்றி முத்தழகம்மாளிடம் கூறிப் புகழ ஆரம்பித்த போது குமரப்பனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. வெளிப்படையாகப் புகழ்ந்து விட்டு அந்தப் புகழ்ச்சியினால் எதிரி நலிந்து கவனக்குறைவாக இருக்கும்படி செய்தபின் அவனுக்கு நேர்மாறான காரியங்களை இரகசியமாகச் செய்கிற வஞ்சகத் திறமை கண்ணாயிரத்துக்கும் உண்டு என்று குமரப்பன் அறிவான். இவன் நமக்கு மிகவும் வேண்டிய நண்பன்' என்று தன்னைப் பற்றி நம்மைப் புரிந்து கொள்ளும்படிசெய்துவிட்டுப்பின்னால் போய் பகைவனாக வேலை செய்கிறவன்தான் சமூக வாழ்க்கையில் தனிமனிதனைப் பாழாக்கி விடுகிற பயங்கர எதிரி. இப்படி எதிரிகள் ப்ார் யாரென்று கண்டுபிடித்து அவர்களைத் தன் வழிகளிலிருந்து விலக்கிவிட முடியுமானால் அதற்கப்புறம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போர் புரிய வேண்டிய அவசியம் மட்டும்தான் இருக்கும்; மனிதர்களை எதிர்த்துப் போர் புரிய வேண்டியிருக்காது. கண்ணாயிரம் அப்படி விலக்கிவிட வேண்டிய எதிரிதான் என்பதை நீண்ட நாட்களுக்கு முன் 'குத்துவிளக்கு காரியாலயத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த சில தினங்களிலே குமரப்பன் தீர்மானம் செய்திருந்தான். அதனால் கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் தன்னைப்பற்றித்துக்கி வைத்துப் பேச ஆரம்பித்ததைக் குமரப்பன் சும்மா சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தானே தவிர மனமார ஏற்றுக் கொள்ளவில்லை. நவீன யுகத்தில் நாகரிகமான இந்த நூற்றாண்டு மனிதர்களை அடித்து வீழ்த்துவதற்கும் சோம்பேறிகளாக்குவதற்கும் புகழைப்போல் நளினமான பயங்கர ஆயுதம் வேறு இல்லை என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/288&oldid=595407" இலிருந்து மீள்விக்கப்பட்டது