பக்கம்:பொன் விலங்கு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பொன் விலங்கு

உதவியாசிரியரைக் கேட்ட கேள்வியில் சிறிது ஆத்திரமும் ஒலித்தது. -

"நீங்கள் சற்று முன்னால் கேட்ட கேள்விக்கு மனப்பூர்வமாக நானே மறுமொழி கூறவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் சொல்லிய பதிலே போதுமென்று நினைக்கிறீர்களா?"

'என்னடிது? இப்படிக் கேட்கிறே? நீ என்னை மீறிக்கிட்டுச் சொந்தமாகச் சொல்றதுக்கு வேறே பதில் வச்சிருக்கிறாயா?" என்று மோகினியின் அம்மா அவள் வாயையே மேலே பேசவிடாமல் அடக்கி விடுகிற அதிகாரக் குரலில் மிரட்டினாள். மோகினி அந்த மிரட்டலுக்குப் பயந்து சிறிதும் அடங்கவில்லை.

'நீசும்மா இரும்மா! நீயும் கண்ணாயிரம் மாமாவுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கி விடாதீர்கள். இந்த உலகமே மஞ்சள்பட்டி ஜமீன்தாரால்தான் நடக்கிறதென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை. என்னைப்பற்றி ஏதோ கேள்வி கேட்டால் அதற்கும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரால்தான் நான் நாட்டியமே ஆடமுடிகிறதென்று சொல்வதை மட்டும் ஒப்புக் கொள்ளவே முடியாது. நிஜத்தைச் சொல்லவேண்டுமானால் போன மாதம் சித்திரா பெளர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடினேனே, அன்றுதான் நான் என்னை மறந்த இலயிப்போடு, ஆண்டாளாகவே மாறி ஆடினேன்.அதைப்போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை' என்று மோகினி கூறியதும் குமரப்பன் மனதுக்குள் அவள் தைரியத்தைப் பாராட்டினான். மஞ்சள்பட்டி ஜமீன்தாரிடம் பணம் கறப்பதற்காக அவர்கள் இப்படிப் பொய் சொல்வதை எதிர்த்து மோகினி துணிவாகக் குறுக்கிட்டுப் பதில் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"மோகினி நான்சொல்றதிலே ஓர் அர்த்தம் இருக்கு நீஎன்றைக்கு நன்றாக ஆடியிருந்தாலும் கவலையில்லை. பத்திரிகையிலே கொடுக்கிற பதிலில் மட்டும் மஞ்சள்பட்டிஅரண்மனைநவராத்திரியில் ஆடினபோதுதான் பிரமாதமாக ஆடினேன் என்று கொடுத்து வைப்போமே! அதில் நமக்கென்ன வந்தது? ஜமீன்தார் புகழ் பிரியர். அவருடைய மனம் இதனால் திருப்திப்படும்' என்று கண்ணாயிரம் பிடிவாதமாக விட்டுக்கொடுக்காமல் மோகினியைக் கெஞ்சினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/290&oldid=595413" இலிருந்து மீள்விக்கப்பட்டது