பக்கம்:பொன் விலங்கு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 289

'யாரோ திருப்திப்படறதுக்காக நான் நாட்டியமாடலை."

'எதிர்த்துப் பேசாதடி நாங்கள் உன் நன்மைக்காகத்தான் சொல்றோம்னு நெனை."

அடக்க முடியாத கோபத்தோடு அம்மா சீறினாள். மோகினியின் மை தீட்டிய கண்களில் நீர் முத்துக்கள் திரண்டன. மேலும் அங்கே உட்கார்ந்திருக்க விரும்பாமல் அழுது கொண்டே எழுந்து மாடிக்கு போனாள் அவள். பேட்டி முடிந்து விட்டதாகப் பேர் பண்ணிவிட்டுக் கண்ணாயிரம் உதவியாசிரியரையும் குமரப்பனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது,"பேட்டி மிகவும் நல்லபடியாக ஆயிற்று. உங்களுக்குத்தான் மிகவும் நன்றி சொல்லணும்' என்று உதவியாசிரியர் கண்ணாயிரத்தின் தலையில் தாராளமாகஐஸ்துவினார்.

"ஆமாம்! ஆமாம்! இதில் சாருக்குத்தான் முக்கியமாக நன்றி சொல்லனும். ஏறக்குறைய இந்தப்பேட்டியில் மோகினிக்குச்சிரமமே வைக்காமல் எல்லாப்பதில்களையும் சாரே தயாராகச்சொல்லிவிட்டார் அல்லவா?' என்று வாழைப் பழத்தில் ஊசி இறக்குவதுபோல் சொல்லித் தன் வயிற்றெரிச்சலை நாசூக்காகத் தீர்த்துக் கொண்டான்.

குமரப்பன்.

2:3

k யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் தான் அதிகமாகப் பெருந்தன்மையும் அக்கறையும் காண்பிக்க வேண்டு மென்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இரகசியம்,

米 மல்லிகைப் பந்தல் கல்லூரியின் ஒவ்வொரு நாள் அநுபவமும் சத்திய மூர்த்தியின் வாழ்க்கையில் விரைவாகவும் புதுமையாகவும் திருப்பங்களை உண்டாக்கின. அஞ்சாமையையும் நேர்மையையும் பக்கபலங்களாகக் கொண்டு வலது காலை முன்வைத்து எப்போதும்

பொ. வி - 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/291&oldid=595415" இலிருந்து மீள்விக்கப்பட்டது