பக்கம்:பொன் விலங்கு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பொன் விலங்கு

எப்படி எந்தெந்த வார்த்தைகளால் உங்களுக்கு எழுதலாமென்று தெரியாமல் ஏதோ கிடைத்த காகிதத்தில் எப்படியோ எழுதுகிறேன். என்னுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு

வருகிறது. அம்மாவும் கண்ணாயிரமும் என் மனப்போக்கைப்

புரிந்து கொள்ளாமல் என்னைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். என் மனமோ எதிலும் இலயிக்கவில்லை. யார் யாரோ வருகிறார்கள்.

போகிறார்கள். நானோ, உங்களிடம் பறந்து வந்துவிடத் துடிக்கிறேன்.

இந்தக் காகிதம் சிறிசு என் மனத்தில் நினைக்கிற எல்லாவற்றையும்

இதில் எழுதிவிட முடியாது. இதைவிடப் பெரிய காகிதத்தில் கூட அவற்றை எழுதிவிட என்னால் இயலாது. புஷ்ப மரத்தடியில்

வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணமாகும் பூவைப்போல் நான்

தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணமானவள். 'என் ஞாபகமாக

இந்த மோதிரம் உங்கள் கையிலிருக்கட்டும் என்று நான் உங்கள்

கையில் அந்த மோதிரத்தை அணிவித்தபோது ஞாபகம் இருபுறமும்

இருக்கவேண்டும் என்று பதிலுக்கு உங்கள் கைமோதிரத்தைக்

கழற்றி அணிவித்தீர்களே? அந்த ஞாபகம் உங்களுக்கு இருக்கா?

இந்தக் கடிதத்துக்கு உங்களிடம் வந்து சேரும் சக்தி உண்டோ

இல்லையோ? நான் பாட்டுக்குப் பைத்தியம்போல இந்தச் சிறிய

காகிதத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதுகிறேன். இன்று சாயங்காலம்

இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முன் மீனாட்சி கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே பிராகாரத்தில் சுற்றும்போது உங்கள்

ஞாபகத்தினால் தவித்துப்போனேன். இதற்குமேல் என்னால் ஒன்றும்

எழுதமுடியவில்லை. இந்தக் கடிதத்தை முடிக்கிறதுக்கு முன் என்

வேதனையை உங்களுக்குச் சொல்வதற்கு நல் வாக்கியம்

வேண்டுமென்று யோசித்து யோசித்துக் கடைசியில் கீழ்க்காணும்

வாக்கியத்தோடு முடிக்கிறேன். உங்களுடைய வாத்தியம்

உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் வாசிக்க நீங்கள்

இல்லாமல் தூசி படிந்துபோய் மூலையில் கிடக்கிறது-இப்படிக்கு

உங்கள் அடியாள் மோகினி,"

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது மோகினியே அருகில் வந்து நின்றுகொண்டு மெல்லமெல்ல விசும்பி அழத் தொடங்குவதுபோல் சத்தியமூர்த்திக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. பாரதியின் கடிதத்தைப்போல் ஆரம்பமும் முடிவும் நடுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/298&oldid=595429" இலிருந்து மீள்விக்கப்பட்டது