பக்கம்:பொன் விலங்கு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பொன் விலங்கு

வருகிறீர்களா?' என்று இரைந்து சிரித்துக்கொண்டே கேட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. தான் சுவாரஸ்யமாக ஈடுபட்டுப் பேசிக்கொண்டிருப்பதை அவள் அவமதிப்பதாக எண்ணிய சத்தியமூர்த்தி அவளையும் அவள் தோழிகளையும் சர்ரென்று நீரைக் கிழித்துக்கொண்டு வந்து நிற்கும் விசைப்படகையும் முற்றிலும் கவனியாதது போலவே முற்றிலும் பாராமுகமாக இருந்துவிட்டான்.

24

}; ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுய நலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.

தன்னைப் பொருட்படுத்த வேண்டு மென்றும், தனக்காக ஏங்கிக் தவிக்க வேண்டுமென்றும் பிறரிடம் எதிர்பார்ப்பதில் பெண்களுக்கு இணையேயில்லை. பெண்ணின் மனத்தில் பெரிய அந்தரங்கமும் ஆசையும் இதுதான். அவளுடைய இரகசியமும் இதைத் தவிர வேறில்லை. அவளுடைய பகிரங்கமும் இதைத் தவிர வேறில்லை. இப்படி எதிர்பார்ப்பதன் விளைவு எதுவோ அதைப் பொறுத்தே அவள் வெற்றியாக ஏற்றுக்கொள்வதும், தோல்வியாகப் பாவிப்பதுமாகிய முடிவுகள் நேர்கின்றன. படகைத் திருப்பிக் கொண்டுபோய்ச் சத்தியமூர்த்திக்கு அருகே நின்று அவனை அழைத்தபோது, அவன் பாராமுகமாக இருந்து விட்டதைக் கண்ட பாரதி அதைத் தன்னுடைய தோல்வியாகவே பாவிக்கத் தொடங்கினாள். எதிர்பார்க்கிற இடத்தில் எதிர்பார்த்துத் தவிக்கின்ற அன்பு இல்லாமையை உணரும்போது பெண்ணைப் போல் வாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/302&oldid=595441" இலிருந்து மீள்விக்கப்பட்டது