பக்கம்:பொன் விலங்கு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாதி - 305

தேவைப்பட்டார். எல்லா இடங்களும் கண்ணாயிரம் உடன் வந்தால்தான் தனக்குக் கெளரவம் என்று தப்பாக எண்ணிக் கொண்டிருந்தாள் அம்மா. இந்த நிலைமையை எண்ணி அம்மாவின் மேல் கோபப்படுவதா பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை மோகினிக்கு. அன்று காரில் நாட்டரசன் கோட்டைக்குப் போகும்போதும் கண்ணாயிரத்தின் மேல் தாங்க முடியாத அருவருப்போடுதான்பிரயாணம் செய்துகொண்டிருந்தாள் அவள். காரில் அம்மாவும் கண்ணாயிரமும் சளசளவென்று ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கலியாணத்துக்கு எந்தெந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் வருவார்கள், எவ்வளவு தடயுடலாக ஏற்பாடுகள் செய்திருப்பார்கள் என்பதைப் பற்றி அவர்கள் பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது. மோகினி ஒன்றும் பேசப் பிடிக்காமல்அவர்கள் பேசிக் கொண்டிருப்பது எதுவோ அதைக் கேட்கவும் பிடிக்காமல் மிகவும் பொறுமையோடிருந்தாள்.

கோடை வெயில் மண்டையைப் பிளக்கும் உச்சி நேரத்துக்கு அந்த ஊரை அடைந்தது கார், மனிதர்கள் அதிகம் பழகாமல் பூட்டிக் கிடக்கும் பெரிய பெரிய வீடுகளோடும் அகன்ற புழுதி மயமான சாலைகளோடும் தோன்றிய அந்த ஊர் அந்த ஒரே ஒரு கலியாணத்துக்காக வந்திருந்த கார்களுடனும், மனிதர்களுடனும்அவர்களால் உண்டாக்கிய செயற்கைக் கலகலப்புடனும் இலங்கிக் கொண்டிருந்தது. தெருவில் நுழைந்த கார்கலியான வீட்டு வாசலில் பந்தலுக்கு முன்னால் போய் நிற்பதற்குமுன் ‘டான்ஸ்காரங்க வந்தாச்சு என்று ஒரு வகை பரபரப்பான பேச்சும் பரபரப்பான கூட்டமும் சேர்ந்திருந்தது. அந்தச் சிறிய ஊரில் அன்றைக்குப் பகலில் மிகப்பெரிய சென்லேஷனல் நியூஸ் (உணர்ச்சியூட்டும் சேதி) டான்ஸ்காரங்கள்ளாம் வந்தாச்சாமே? என்பதாகத்தான் இருந்தது. காரையும் தன்னையும் மேலும் கீழுமாக வெறித்து வெறித்துப் பார்க்கும் கூட்டத்துக்கு நடுவே கூசியபடி தலையைக் குனிந்து கொண்டே காருக்குள் கொண்டே காருக்குள் உட்கார்ந்திருந்தாள்மோகினி. அந்த நிலையில் அந்த சிறிய ஊரின் இரசிகப்பெருமக்களுக்கு நடுவே அவள் ஓர்.அபூர்வமாக இருந்தாள். கண்ணாயிரம் கீழே இறங்கிப் போய்க் கலியான வீட்டுக்காரரிடம் தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டின்

ઊut. 65 - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/307&oldid=595451" இலிருந்து மீள்விக்கப்பட்டது