பக்கம்:பொன் விலங்கு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பொன் விலங்கு

சாவியை வாங்கிக் கொண்டு வந்தார். தெருக் கோடியில் அரண்மனை போல் பெரிதாயிருந்த ஒரு பழைய வீட்டின் மாடியில் இரண்டு விசாலமான அறைகளை அவர்கள் தங்கிக் கொள்வதற்காக ஒழித்து விட்டிருந்தார்கள்.

'மோகீ! இந்தக் கலியாணத்திலே நீ டான்ஸ்ாடப் போறேங்கிறதை எதிர்பார்த்து இந்த ஊரே பரபரத்துப் போய்க் காத்துக் கொண்டிருக்காம்' என்று அறைக்கதவைத் திறந்து கொண்டே வியந்தாற்போல் கூறத் தொடங்கினார் கண்ணாயிரம்.

மோகினி இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சலித்தாற்போல் 'உச்சூக் கொட்டினாள்.

'இல்லையா பின்னே? ராத்திரி டான்ஸ் முடிஞ்சதும் மறந்திடாமல் என் செல்லக் கண்ணுக்குத் திருஷ்டி கழிக்கணும்' என்று முத்தழகம்மாளும் ஒத்துப் பாடினாள். மோகினியோ ஒன்றிலும் மனம் ஒட்டாமல் சலித்துப் போயிருந்தாள். கலியான வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் மாலை நேரத்துக் கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் முறையைக் கழிப்பதற்காகவே இருக்கும். எதிரே உட்கார்ந் திருப்பவர்கள் பகல் சாப்பாட்டில் பாயசம் நன்றாயில்லாமல் போய்விட்டதைப் பற்றியும் மாலைச்சிற்றுண்டியின்போதுகாப்பியில் வெந்நீரைக் கலந்து விட்டதைப் பற்றியும் வம்புபேசிக் கொண்டிருப் பார்கள். பேசாமல் வந்து உட்காருகிறவர்களும் பாதியிலே கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு நாசூக்காக எழுந்து போய் விடுவார்கள். கொலு வைத்த பொம்மைகளைப்போல் கலியாணப் பெண்ணும் பிள்ளையும் மட்டுமே வரவேற்பு மேடையில் கடைசிவரை இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாரும் வருவதும் போவதும் உட்காருவதும்பேசுவதுமாக ஏதோ ஒரு பரபரப்பில்-எதிரே தங்களுக்காகவே-தங்களைச் சபையாகக் கொண்டே நடத்தப்படும் நாட்டியக் கச்சேரியை கூடக் கவனிக்காத பரபரப்பில் ஈடுபட்டிருப்பார்கள். இன்னும் சிலர் நாற்காலிகளில் முன்புறம் மேடையைப் பார்த்து அமர்ந்துவிட்டுச்சிறிதுநேரமானதும் பின்புறத்து வரிசையில் இருப்பவர்களோடு திரும்பிப் பேசத் தொடங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/308&oldid=595453" இலிருந்து மீள்விக்கப்பட்டது