பக்கம்:பொன் விலங்கு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 319

"ஒரு மில்க்கரென்ஸிக்குநாலணாகொடுத்துவாங்குகிறோம்சார் முக்கால்வாசி நாட்கள் திரிந்துபோன பாலைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சில நாட்களில் சர்க்கரை போட மறந்து போகிறார்கள். இன்னும் சில நாட்களில் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும்போது பாலாக இருந்ததுநாங்கள்பருகுவதற்குக்கையில் எடுக்கும்போது தயிராக மாறிவிடுகிறவிந்தையைக் காண்கிறோம்-" என்றுகோபமாகவும்.அந்தக் கோபத்தில் பிறந்தநகைச்சுவையுடனும் சத்தியமூர்த்தியிடம் வந்து குறை சொல்லிக்கொண்டு நின்றார்கள் அந்த மாணவர்கள்.

"இதை நீங்கள் ஏன் வார்டனிடம் போய்ச்சொல்லக் கூடாது?" என்று கேட்டான் சத்தியமூர்த்தி. - -

"வார்டனிடம் நாலைந்து முறை சொல்லி அலுத்துப்போச்சு சார் அதிகம் சொன்னால், சரிதான் போங்கப்பா...ஒருநாள் திரிந்த பாலைக் குடித்தால்தான் என்ன? குடியா முழுகிவிடும்?' என்று அவரே பதில் சொல்லி விடுகிறார் சார்' என்று சத்தியமூர்த்திக்குச் சொல்வதற்குத் தயாராகப் பதில் வைத்திருந்தார்கள் அந்த மாணவர்கள்.

'வரவர மல்லிகைப் பந்தல் காலேஜ் கரென்ஸி'யின் மதிப்பு அதலபாதாளத்துக்குக் கீழே இறங்கிப் போய் விட்டது சார் என்று சத்தியமூர்த்தி தங்களைத் தவறாகப் புரிந்துகொள்கிற ஆளில்லை என்ற நம்பிக்கையோடும், உரிமையோடும், சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னான் மற்றொரு மாணவன். அன்று பிற்பகலில் அவன் மாணவர்கள் சார்பில் வார்டனிடம் இதை எடுத்துக் கூறச் சென்றபோது முதல் நாள் நிகழ்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு அவர் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. இரண்டாம் தரம் சற்றே அழுத்திக் கேட்ட போதும் 'இதெல்லாம் நீங்களே பார்த்து ஏற்பாடு செய்யலாமே? என்னைக் கேட்பானேன்? நிர்வாகியையே நேரில் சந்தித்துக்கூட இதைப்பற்றி விவாதிப்பீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/321&oldid=595481" இலிருந்து மீள்விக்கப்பட்டது