பக்கம்:பொன் விலங்கு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 - பொன் விலங்கு

நீங்கள். உங்களால் முடியாத காரியமும் உண்டா?" என்று குத்தலாக மறுமொழி கூறினார்'வார்டன், சத்தியமூர்த்திக்கு எதற்காக இவரைத் தேடி வந்தோம் என்று வெறுப்பாகிவிட்டது. காலையில் கல்லூரிக்குள் நுழையும்போது மனம் விட்டுப் பழகுவதற்கு உண்மை நண்பர்கள் இல்லாத பாலைவனமாக அது தோன்றியதே. அதே போன்றதொரு தனிமையை மீண்டும் உணர்ந்தவனாக அரை நாளைக்கு லீவு எழுதிக்கொடுத்துவிட்டு அறைக்குத் திரும்பிவிட்டான் அவன். கல்லூரிக் காம்பவுண்டிலிருந்து அவன் வெளியேறு முன் ஊழியன் பிற்பகல் தபாலில் அவன் பெயருக்கு வந்திருந்த கனமான கடித உறை ஒன்றைப் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். முகவரி எழுதியிருந்த கையெழுத்து குமரப்பனுடையதாக இருக்கவே மனம் சிறிது ஆறுதலடைந்தது. அறையில் போய் அந்த உறையைப் பிரித்து நண்பனையே நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியோடு அவனுடைய கடிதத்தைப் படிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே சத்தியமூர்த்தி வேகமாக நடந்தான். அன்றிருந்த மனநிலையில் குமரப்பனின் கடிதம் வந்தது அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது. அறைக்குப் போய் எதிரே மலைகளும் அமைதியான ஏரி நீர்ப்பரப்பும் தெரிகிறாற்போல் மாடி வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு

அந்தக் கடித உறையைப் பிரித்தபோது அவன் எதிர்பாராத வேறு மகிழ்ச்சியும் அந்த உறைக்குள்ளே இருந்தது. மோகினி

நாட்டியமாடும் கோலத்தில் எடுத்த புதிய புகைப்படங்களிரண்டும்

உறைக்குள் இருந்தன. ஒரு படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.அவனைப்பார்த்தேசிரிப்பதுபோலிருந்தது.அந்த அழகிய படம். குமரப்பன் எதற்காக எப்படி இந்தப் படங்களை எடுத்து அனுப்பினான் என்று அறிந்து கொள்ளத் தவிக்கும்

மனத்தோடு அவனுடைய கடிதத்தைப் படிக்கத் தொடங்கினான்

சத்தியமூர்த்தி. உண்மை நண்பனின் அந்தக் கடிதம் அன்று அவனுக்கு ஏற்பட்டிருந்த எல்லாவிதமான கவலைகளையும் மறக்கச் செய்தது. - . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/322&oldid=595483" இலிருந்து மீள்விக்கப்பட்டது