பக்கம்:பொன் விலங்கு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

米

துன்பங்களால் மனம் பொறுமை யிழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும் அறநூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவி கள் ஒன்று சேர்ந்து கொண்டு எழுதி வைத்து விட்டுப் போயிருப்பார்களோ என்று கூட நமக்குத் தோன்றிவிடுகிறது.

k

நண்பன் குமரப்பனுடைய அந்தக் கடிதம் அவனுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதைப்போல் சுவை நிரம்பியதாக இருந்தது. மனமும், உணர்ச்சிகளும் தளர்ந்து போய்க் கல்லூரியிலிருந்து அறைக்குத் திரும்பியிருந்த அந்த மாலை வேளையில் அப்படியே மதுரைக்குப் பறந்து போய் நண்பனோடு வைகையாற்று மணலில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து பேசவேண்டும் போன்ற தவிப்பை அந்தக்கடிதம் உண்டாக்கியிருந்தது. வரிபிறழாமல் அழகிய கையெழுத்துக்களால் நேராக எழுதும் வழக்கம் குமரப்பனிடம் உண்டு. எப்போதாவது சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும் அந்தக் கையெழுத்தைப் பற்றிப் புகழ்ந்தால், "எண்ணங்களில் கோணல் இல்லாதவர்களுக்குக் கையெழுத்தும் கோணல் இல்லாமல்தானே இருக்கும்?' என்று பெருமிதத்தோடு குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டேபதில் சொல்வான்குமரப்பன்.அவனுடைய கர்வத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். தன்னிடம் இருக்கிற திறமையை மற்றவர்கள் புகழ்ந்தால் மட்டுமே இப்படிக் குறும்புத்தனமாகவோ, நகைச்சுவை யாகவோ மறுமொழி கூறுவான்; இல்லாத திறமைக்காக யாராவது பொய்யாய்ப் புகழத் தொடங்கினாலோ அதற்குக் கிடைக்கிற பதில் சூடாயிருக்கும். குமரப்பனைப்போல் பொருளாழமும், குத்தலும், குறும்பும், நகைச்சுவையுமாக உரையாடும்.துணிவைக் கூடப்பிறரிடம் காண்பது அருமையாக இருக்கும். -

பொ.வி -21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/323&oldid=595485" இலிருந்து மீள்விக்கப்பட்டது