பக்கம்:பொன் விலங்கு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பொன் விலங்கு

என்னையும் போல் நிதானமாக நடந்து வருகிறவர்களுக்கும் நியாயத்தையும் அதனால் வருகிற துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு செல்ல விரும்புகிறவர்களுக்கும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் ஏதாவதொரு தடை காத்துக் கொண்டிருக்கிறது. 'கார்ட்டுன்' படத்தில் யாராவது ஒருவர் சிரிப்பதாக நான் வரைந்தேனானால் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தோற்றம் முக்கியமல்ல! எதற்காக என்ன பாவனையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்ற குறிப்புதான் முக்கியம். அதைப் போல மனிதன் வாழ்கிறான் என்பதைவிட, எப்படி எதற்காக வாழ்கிறான் என்பதுதான் முக்கியம். ஆனால் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் “எதற்காக வாழ்கிறார்கள்?' என்ற கேள்வி தங்களைப் பற்றிப் பிறரிடம் எழுதுவதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் அத்தனை வேகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆமை முயல் கதையில் "ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் தி ரேஸ் (மெதுவாகவும், நியாயமாகவும் போய்ப் பந்தயத்தில் வெற்றி யடையலாம்) என்று மூன்றாவது வகுப்பில் நீயும் நானும் படித்தநீதி போதனை இப்போது இந்த வயதுக்கும் இந்த நாள் அநுபவங்களுக்கும் ஏற்றாற்போல் புதிய தொனியுடன் எனக்கு இன்றும் ஞாபகம் வருகிறதடா சத்யம். உலகத்தின் அநியாயங்களையும், பரபரப்பையும் பார்த்து நாம் பொறுமை இழந்து போகிற சமயங்களில் இந்த நீதிக்கதையின் மேலும் இதை எழுதியவன் மேலும் கோபம் கோபமாக வருகிறது. துன்பங்களால் பொறுமை இழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும், அறநூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவிகள் ஒன்று சேர்ந்துகொண்டு எழுதிவைத்திருப்பார்களோ என்று கூடத் தோன்றிவிடுகிறது. இப்படித் தோன்றுவது பாவமாயிருக்கலாம். ஆனாலும் இப்படி நினைப்பது பாவம்' என்ற எச்சரிக்கையோடுசேர்த்தே நாம் நினைக்கிற பாவங்கள் இல்லையா? அவற்றில் இதையும் ஒன்றாக வைத்து நமக்கு நாமே மன்னித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் இப்போது நேரமில்லை. அவற்றை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்' என்று முடித்திருந்தான் குமரப்பன்.

அந்தப் பெரிய கடிதத்தை இரண்டாம் முறையாகவும் மூன்றாம் முறையாகவும் படிக்கும்போது எல்லா இடங்களையும் படிக்காமல், முக்கியமான இடங்களை மட்டும் சத்தியமூர்த்தி திரும்பப் படித்திருந்தான். ஆனாலும் அன்று மாலை அவன் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/328&oldid=595495" இலிருந்து மீள்விக்கப்பட்டது