பக்கம்:பொன் விலங்கு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 327

உணர்ந்து தவித்துத் தனிமையிலிருந்தும் குனியத்திலிருந்தும் அவன்ை விடுதலை செய்திருந்தது அந்தக் கடிதம். கல்லூரியில் வார்டனும் சக ஆசிரியர்களும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசப்பழகும் நிலையை நினைத்து மனம் வெந்து கொண்டே அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பி iயிருந்தவனை அந்தக் கடிதம் வலிமையுள்ளவனாக்கியிருந்தது. கடிதத்தையும் அதனோடிருந்த புகைப்படங்களையும் அறைக்குள் மேஜை டிராயரில் கொண்டுபோய் வைத்துவிட்டுப் பூட்டிக் கொண்டு சாப்பிடப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி,

மாலையும் இரவும் கலந்து மயங்குகிற அந்த வேளையில் மல்லிகைப் பந்தல் நகரத்தின் இதயம் போன்ற பகுதியாகிய லேக் சர்க்கில் கலகலப்பாக இருந்தது. கார்களின் ஹாரன் ஒலிகளும், பச்சையும் சிவப்புமாக மின்னி மறையும் விளக்கு ஒளிகளும், கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களுமாய்ச் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் மனிதர்களின் குரல்களும், வானொலி இசையும் ஏரியில் படகுகள் நீரைக் கிழிக்கும் ஒசையுமாகச் சூழ்நிலையில் உயிரோட்டம் நிறைந்திருந்தது. சாலையின் இரு பக்கத்திலும் பாக்கு மரங்கள் பாளை வெடித்துப் பூத்துக் குலை தள்ளியிருந்தன போலும். அந்த வாசனை வீதியெல்லாம் நிறைந்து பெருமைப்படுத்திக் கொண்டிருந்தது. எப்படி எந்தச் சொற்களினால் வருணித்து முடிக்கலாமென்று நினைக்கவும் முடியாத மங்கலமான வாசனையாயிருந்தது அது. கோயில் மூலக்கிருகத்தின் புனிதமும் மல்லிகை, பிச்சிப் பூக்களின் மயக்கும் தன்மையும், கஸ்தூரியின் கமகமப்பும் எல்லாம் சேர்ந்தாற் போன்ற நறுமணமாயிருந்தது.

இந்த நறுமண வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த போது சத்தியமூர்த்திக்கு வேறு ஒரு வாசனையும் ஞாபகம் வந்தது. மோகினியின் வீட்டில் மல்லிகைப் பூக்களும் அகிற் புகையும் மணந்து கொண்டிருந்த சாயங்கால வேளை ஒன்றில் அவளோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நினைத்தான் அவன். வாசனைக்கும் மனிதனுடைய ஞாபகங்களுக்கும். ஏதோ ஒரு நுணுக்கமான தொடர்பு இருக்க வேண்டும் போலும். லேக் அவென்யூவின் தன்னுடைய மாடி அறையிலிருந்து சத்தியமூர்த்தி ஒவ்வொரு நாள் வைகறையிலும் படியிறங்கிக் கீழே வரும்போது 'ராயல் பேக்கரி வாசலில் படரவிட்டிருக்கும் கொடி மல்லிகை பொல்லென்று பூத்துக்கொட்டியிருக்கும். காலை நேரத்தின் குளிர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/329&oldid=595497" இலிருந்து மீள்விக்கப்பட்டது