பக்கம்:பொன் விலங்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 31

திருப்தியோடு அந்தப் புத்தகங்களை மூடி வைத்தார் பூபதி. பின்பு அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, "நீங்கள் கல்லூரியில் இலக்கிய வகுப்பு நடத்தும்போது, "வாட் ஈஸ் லிட்டரேச்சர்? (இலக்கியம் என்பது என்ன?) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்?" என்று அவனுடைய திறமையை இன்னும் பரிசோதிக்க முயலும் குறும்புச் சிரிப்போடு நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் பூபதி. - "லிட்டரேச்சர் ஈஸ் ஏ ரிகார்ட் ஆஃப் பெஸ்ட் தாட்ஸ்' (இலக்கியம் என்பது சிறந்த எண்ணங்களைப் பதித்து வைத்துக் கொண்டிருப்பது) என்றே எமர்சனின் கருத்தோடு தன் விளக்கத்தைத் தொடங்கிய சத்தியமூர்த்தி அரைமணி நேரம் வெண்கலமணியை அளவாக விட்டுவிட்டு ஒலிப்பது போல் கணிரென்ற குரலில் உணர்ச்சி நெகிழக் தானே அநுபவித்து இரசிக்கும் ஆர்வத்தோடு பேசிய பின்னே ஓய்ந்தான். இலக்கியம் இன்னதென்பதை இலக்கியத்தை ஆழ்ந்து கற்பதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்ற டி.எஸ். எலியட்டின் மேற்கோளுடன் கேட்பவர்களைக் கவர்ந்து மயக்கும் சிறியதொரு சொற்பொழிவாக நிறைந்து முடிந்தது அவன் பேச்சு. பிரின்ஸிபல் ஒன்றும் பேசத் தோன்றாமல் மூக்கில் விரலை வைத்தார். பூபதியின் மனத்தில் அந்தரங்கமான மகிழ்ச்சி அதிகமாயிற்று. சுவரில் சாய்ந்தாற்போல் நின்று கேட்டுக்கொண்டிருந்த பாரதியின் கண்களில் ஆனந்தம் இன்னும் அதிகமாக பூக்கத் தொடங்கியிருந்தது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு 'இன்னும் ஏதாவது உண்டா? என்பதுபோல அவரைப் பார்த்தான்.

"மிஸ்டர், சத்தியமூர்த்தி மற்ற இடங்களில் நடக்கும் 'இண்டர்வ்யூ”வுக்கும் இங்கு நடைபெறும் இண்டர்வ்யூ'வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை இதற்குள் நீங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஏதோ முறையை கழிப்பதற்கான ஒரு வழக்கமாகவோ, ஃபார்மலிடியாகவோ இண்டர்வ்யூவை நாங்கள் இங்கே நடத்துவதில்லை.நாங்கள் யாரைத்தேர்ந்தெடுக்கவேண்டுமோ அவரைப் பலவிதங்களிலும் சோதனை செய்து தெரிந்து கொண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/33&oldid=595499" இலிருந்து மீள்விக்கப்பட்டது