பக்கம்:பொன் விலங்கு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 329

சொற்பொழிவுகளுக்காகச் சிந்தனை செய்தும் இரண்டொரு புத்தகங்களைப் படித்தும் சில குறிப்புகள் எடுக்க வேண்டியிருந்தது. இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணிவரை ஒருமனி நேரம் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டுப் படுக்கச் சென்றான் சத்தியமூர்த்தி, அன்றென்னவோ அவனுடைய ஞாபகத்தில் மோகினியே இருந்தாள்.

சித்திரா பெளர்ணமியன்றே தான் பெருமிதமாக ஆண்டாள் நடனத்தை ஆடியதாக குத்துவிளக்கு பேட்டியில் அவள் மறுமொழி கூறினாள் என்று அறிந்ததும் சத்தியமூர்த்தி அவளுடைய அன்புக்காகப் பெருமிதப்பட்டான். சித்திரா பெளர்ணமியன்று நாட்டியம் முடிந்ததும் அவளோடு தனிமையில் பேசிக் கொண்டிருந்த பேச்சும் அவனுக்கு நினைவு வந்தது. அன்று அவன் எதைச் செய்தாலும் அவளுடைய நினைவிலேயே போய் முடிந்தது. எதைத் தொடங்கினாலும் அவளுடைய நினைவோடுதான் ஆரம்பமாயிற்று. குளிர்ந்த காற்றும் பாக்கு மரங்களின் பூத்த நறுமணமுமாக அறைக்குள் படுத்த சில விநாடிகளில் ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தான் சத்தியமூர்த்தி.

அன்றிரவு உறக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். உறங்குவதற்கு முந்திய ஞாபகங்களும், நினைவுகளும் பொருத்த மாகவும், பொருத்தமின்றியும், இணைந்தும், இணையாமலும் அந்தக் கனவாக விளைந்திருந்தது. எல்லாவிதத்திலும் அந்தக் கனவின் நிகழ்ச்சிகள் அபூர்வமாகவும், விளங்கிக் கொள்ளமுடியாதனவாகவும் இருந்தன.

பிரம்மாண்டமான பெரிய பெரிய கட்டிடங்கள் வரிசை வரிசையாக அணிவகுத்திருக்கும் ஓர் அழகிய வீதி தெரிகிறது. அந்த வீதியின் நடுவே கிழிந்த சட்டையும் அழுக்கடைந்த வேட்டியுமாக அத்தகைய வீதியின் அழகுக்கும் செழிப்புக்கும் சிறிதுகூடப் பொருத்தமில்லாத பிரகிருதியாகச் சத்தியமூர்த்தி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய முகம் பொலிவிழந்து, தளர்ச்சியாகவும் சோர்ந்து தெரிகிறது. வாழ்க்கையில் நீதி நேர்மைகளுக்காகப் போராடிப் போராடி சலித்த சலிப்பு நடையில் தெரிகிறது. ஆனால் அந்தச் சலிப்பான வேளையிலும் அவனுடைய வலதுகால்தான் நடப்பதற்கு முந்திக் கொண்டிருக்கிறது. அப்படி அவன் அந்த வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது நடுவழியில் ஒரு சம்பவம் நேரிடுகிறது. வீதியின் வலது சிறகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/331&oldid=595503" இலிருந்து மீள்விக்கப்பட்டது