பக்கம்:பொன் விலங்கு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 331

"ஆதரவற்றதெல்லாம் ஏழைதான் அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்கிறாள் அவள். "உன்னுடைய இந்த அன்பு எனக்குப் பூட்டும் விலை மதிப்பற்ற விலங்காக இருக்கிறது பெண்ணே இந்த விலங்கைக் கழற்றினாலும் எனக்கு வேதனை கழற்ற முடியாவிட்டாலும் வேதனை" என்று அவன் பதிலுக்குக் கதறுகிறான்.

வ்வளவில் அவன் கனவு அரை குறையாகக் கலைந்துபோய் விடுகிறது. சரியாக இந்தக் கனவு தொடங்கிக் கலைந்து சத்தியமூர்த்திக்கு விழிப்பு வந்தபோது விடியற்காலை ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது. விழித்து எழுந்தபின் நீராடுவதற்காகக் குளியலறைக்குள் புகுந்தபோதும், உடை மாற்றிக்கொண்டு தலை சீவுவதற்காகக் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்ட போதும் அவன் மோகினியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து காப்பி அருந்தி வருவதற்காகக் கீழே படி இறங்கிய போது எதிரே தெரிந்த அருவியும், அங்கே பூத்து மலர்ந்திருந்த மல்லிகையும் சேர்ந்து அவன் நினைப்பை ஆண்டன. கால்நடையினிலே உன்தன் காதல் தெரியுதடி என்று முணுமுணுத்தபடி மெல்ல மேலே நடந்தான் சத்தியமூர்த்தி.

27

நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள போலிப் பெரிய மனிதர்கள் நினைக்கிறார்கள்.

- 米 இரவோடு இரவாகக் காரில் நாட்டரசன் கோட்டையிலிருந்து மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கலியான வீட்டில் பணம் வாங்கிக்கொள்ள மறுத்து ஆத்திரமாக வெளியேறியிருந்த காரணத்தினால் காரில் திரும்பி வரும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/333&oldid=595506" இலிருந்து மீள்விக்கப்பட்டது