பக்கம்:பொன் விலங்கு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 335

"அவங்களுக்கு உட்காரத் தெரியும். நீ உன் வேலையைக் கவனி..." என்று கண்ணாயிரம் அவனிடம் கூறினார். நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால், ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள பெரியமனிதர்கள் நினைக்கிறார்கள். தன்னிடம் கருணையோடு இரண்டு வார்த்தை பேசியதற்காகவே கண்ணாயிரம் அந்தக் காரோட்டும் ஊழியனிடம் அவ்வளவு எரிந்து விழுவதைப் பார்த்தபோது அதிலிருந்தே அவருடைய சுயரூபத்தை மோகினியால் புரிந்துகொள்ள முடிந்தது. கண்ணாயிரத்தின் 'திருக்கல்யாண குணங்களைப் பற்றி அவள் புதிதாகப் புரிந்து கொள்வதற்கு ஒன்றும் மீதமில்லை என்றாலும் அவ்வப்போது தன்னைப்பற்றி அவள் சிந்தனை செய்வதற்கு நிறைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார் கண்ணாயிரம். ஆனாலும் பொது இடங்களிலும் நாலுபேர் கூடி நின்று பேசும்போதும் அவரைப் போன்ற போலி மனிதர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்வதுபோல் நல்லவர்களால்கூடக் கவர முடியாது.

மோகினிக்கு அவர் மேல் இவ்வளவு வெறுப்பும் கசப்பும் இருப்பதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. மோகினியும் முத்தழகம்மாளும் அவரை வழிகாட்டியாகக் கொண்டு, அவர் சொல்கிற இடத்தில் நாட்டிய மாடி அவரை வேண்டாமென்று மறுக்கிற இடத்தில் ஆடஒப்புக் கொள்ளாமல் வாழ்வதாக உலகத்தை மயக்கி வைத்திருந்தார் கண்ணாயிரம். அவருடைய வாழ்க்கைத் தத்துவமே தனியானது. தனி வாழ்க்கையில் அவர் கெட்டவராக இருந்தாலும், பொதுவாழ்க்கை அவரை நல்லவராகவும், .பிரமுகராகவும் ஒப்புக் கொண்டிருந்தது. எதிரே நின்று பேசுகிற மனிதரிடமிருந்து எந்தவிதமான குரல் ஒலிக்கிறதோ அந்தக் குரலை அப்படியே எதிரொலித்து அவரோடு ஒட்டிக்கொண்டு பழக முயல்வது கண்ணாயிரத்துக்கு கைவந்த பழக்கம். ஒவ்வொரு துறையிலும் அவர் பழகுகிற மனிதர்களும் பழக்க வழக்கங்களும் எல்லாம் இப்படித்தான். - --

நீங்கள் சொல்றாப்பலே'- என்ற வார்த்தைகளை நாலு தரம் எதிரே இருப்பவரிடம் குழைந்து சொல்லி அவர் சொல்கிற ஒவ்வொன்றையும் தாம் கர்மசிர்த்தையாகக் கவனித்து மனத்தில் வைத்துக் கொள்வதைப்போல் நடித்து விட்டாரானால் அப்புறம் அந்த மனிதன் கண்ணாயிரத்தின் வலையில் சுருண்டு விழுவதற்குக் கேட்பானேன்? எதிராளி ஒன்றுமே சொல்லாவிட்டாலும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/337&oldid=595514" இலிருந்து மீள்விக்கப்பட்டது