பக்கம்:பொன் விலங்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பொன் விலங்கு

லொழியத்தேர்ந்தெடுக்கமாட்டோம். ஆகவே இப்போது உங்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்வியையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புத்தகங்களைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக் கேள்வி கேட்பதுபோல் இப்படி யெல்லாம் கேட்கிறேனேயென்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்..."

'நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்! எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன்வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்கவேண்டும்? நன்றாகக் கேளுங்கள். கேட்கலாமோ, கேட்கக் கூடாதோ என்ற தயக்கமின்றி எல்லாவற்றையும் கேளுங்கள்..." என்று சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் வந்த போது அவனுடைய துணிவைக் கண்டு பூபதி அவர்களும், கல்லூரி முதல்வரும் வியப்படைந்தார்கள். --

சத்தியமூர்த்தியோ தன்னுடைய உண்மை ஒளிரும் அந்தக் கண்களால் அவர்களையும், அவர்கள் மனத்தில் ஓடும் எண்ணங் களையும் அளந்து கொண்டிருந்தான். எப்போதும் வலது காலை முன் வைத்து "இதோ வாழ்வில் இன்னும் ஓர் அடி முன்னால் நடந்து செல்லப் போகிறேன் நான் என்பது போல் வலது பாதம் முன்னால் இருக்கும்படி வழக்கமாக உட்காரும் சத்தியமூர்த்தியின் இலட்சண மான கால்களைத் தன் அழகிய கண்களால் அளந்து கொண்டிருந்தாள் பாரதி, -

'ஹட்ஸ்னையும், ரிச்சர்ட்ஸையும் பற்றி மட்டுமே உங்களிடம் கேட்டுப் பயனில்லை சத்தியமூர்த்தி! நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத்தானே வரப்போகிறீர்கள்? தமிழில் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும். சங்க இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லி விளக்குங்களேன் பார்க்கலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/34&oldid=595520" இலிருந்து மீள்விக்கப்பட்டது