பக்கம்:பொன் விலங்கு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 339

"அப்படிங்களா? கடிச்சித் தின்னா வெள்ளரிப் பிஞ்சைக் காட்டிலும் நல்லாவா இருக்கும்?" என்று அந்தப் பேதைப் பெண் வினவியபோது மோகினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வெள்ளரிப் பிஞ்சைவிட அதிகமான சுவையுள்ள பண்டமும் உலகில் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தோடு கேட்கப்படுவதுபோல் இருந்தது அவளுடைய கேள்வி. அந்தக் கேள்வியிலிருந்த பேதமையின் அழகை இரசித்துக் கொண்டே மோகினி அவளுக்கு மறுமொழி கூறினாள்: 'உங்கள் வெள்ளரிப் பிஞ்சை ஒரு கூடை எட்டனாவுக்கு வாங்கிவிடலாம். இந்த ஆப்பிள் பழம் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றரை ரூபாய் வரை ஆகுமே?..."

"அம்மாடி இதென்ன சீமையிலே இல்லாத.விலையாவில்லே இருக்கும் போலேயிருக்கு? ரொம்பப் பணக்காரப் பழம்'னு சொல்லுங்க...' என்று அந்தப் பட்டிக்காட்டுப் பெண் பாதி வேடிக்கையாகவும் பாதி பிரமிப்பாகவும் ஆப்பிளுக்குப் பணக்காரப் பழம் என்று பேர் வைத்ததைக் கேட்டுத் தன்னுடைய கவலைகளை யெல்லாம் மறந்து மோகினி வாய்விட்டுச் சிரித்தாள். அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணையும் அவளுடைய பட்டிக்காட்டு அத்தானையும் அவர்கள் வசிக்கும் மகிழ்ச்சி நிறைந்த அந்தக் குடிசையையும், அதனருகிலிருந்த ஊருணியையும் தென்னை மரங்களையும், இந்த உலகத்தின் குழப்பமில்லாத எளிய சந்தோஷங்களுக்குச் சின்னங்களாகக் கற்பித்துக்கொண்டு பார்ப்பதுபோல் பார்த்து ஏக்கத்தோடு பெருமூச்சுவிட்டாள் மோகினி. மேடைகளில் நாட்டியமாடிப் பணத்தையும் புகழையும் சம்பாதித்துக்கொண்டு வாழ்க்கையின் நியாயமான உரிமைகளையோ, சுகங்களையோ கூடச் சம்பாதிக்க முடியாமல் வேதனைப்படும் தன்னைவிட வெள்ளரித் தோட்டத்து அத்தானுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையைத் தவிர வேறு புகழ், பெருமைகளுக்கு ஆசைப்படிாத அந்தப் பட்டிக்காட்டுப் பெண் எவ்வளவோ பாக்கியசாலி என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய அத்தானின் கண்களுக்கு அவளைத் தவிர வேறெந்தப் பெண்களும் அழகாகத் தோன்றுவதில்லை. அவள் பாக்கியசாலி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? அந்தப் பட்டிக்காட்டுத் தம்பதிகள் தங்களுடைய சின்னஞ்சிறு குடிசைக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசும்போது அந்தக் குடிசையைத் தவிர அதற்கு அப்பாலிருக்கும் பரந்த உலகில் வேறெங்கும், வேறெதிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/341&oldid=595524" இலிருந்து மீள்விக்கப்பட்டது