பக்கம்:பொன் விலங்கு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாதி 343

வாய்ந்த நகரமான மல்லிகைப் பந்தலில் இப்படி மழைக்கோப்பான நாளாகவும் வேறு இருந்து விட்டால் கிராமாந்தரத்துக் கலியான வீட்டைப்போல் பிடிபடாதனவும் புரிபடாதனவுமாகிய மகிழ்ச்சிகள் நிரம்பியிருக்கும். மலைச்சாரலில் கால்ஃப் பந்தாட்டத்துக்கான புல்வெளிப் பரப்பெல்லாம் மரகதப் பசுமை மின்னிக் கொண்டிருந்தது. புல்வெளிப் பசுமையில் மின்னும் பனித்துளிகளும் நடுநடுவே கால்ஃப்' பந்தாட்டத்துக்கான வெண்மணல் பரப்பிய சின்னஞ்சிறு வட்டங்களும் அங்கே தெரிகிற காட்சியைப் பார்த்துக் கொண்டே நடந்த சத்தியமூர்த்தி அறைக்குள் போவதற்காக மாடிப்படி ஏறுமுன் சாலையில் காரைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பாரதியைச் சந்திக்க நேர்ந்தது. - - -

தவிர்க்க முடியாமலும் பார்க்காததுபோல் விலகிப் போய்விட முடியாமலும் மிக அருகில் நேர்ந்து விட்டது அந்தச்சந்திப்பு. அந்தக் கல்லூரியின் வம்பு பேசும் மனிதர்களையும், பொறாமை நிறைந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு பாரதி தன்னைத் தேடிவருவதை குறைத்துக் கொள்ளும்படி அவளிடமே இரண்டொரு முறை குறிப்பாகச் சொல்லியிருந்தான் சத்தியமூர்த்தி. இன்றும் அவள் தன்னைத் தேடி வந்திருப்பதிலிருந்து அவள் தான் கூறியதைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. கைநிறைய இனிப்புமிட்டாயை வைத்துக்கொண்டே அதற்காக அழுகிற குழந்தையிடம் ஒன்றுமில்லையென்று சொல்லி ஏமாற்றுவதுபோல் அவள் தன்னைத்தான் தேடி வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டே யாரோ யாரையோ தேடி வந்திருப்பது போல் பாராமுகமாகப் போய்விட முடியவில்லை அவனால், நீ இன்னும் இப்ப்டி என்னைத் தேடி வரலாமா? என்று கண்டிப்பது போல் அவளைக் கடுமையாக நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தயங்கி நின்றான் சத்தியமூர்த்தி. அவளோ அவன் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கினாள். நாவும் அழகிய உதடுகளும் எவ்வளவு வேகமாகப் பேசத் துடித்துக் கொண்டிருந்தனவோ, அவ்வளவு வேகமாக ஒத்துழைக்காத சொற்களுடன் அவனிடம் தயங்கித் தயங்கிப் பேசினாள் அவள்.

"அன்று மாலை எரிக்கரையில் போட் கிளப் அருகே புல்வெளியில் நீங்கள் மாணவர்களோடு உட்கார்ந்து பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/345&oldid=595532" இலிருந்து மீள்விக்கப்பட்டது