பக்கம்:பொன் விலங்கு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 345

தரைப்பகுதி ஊர்களான நாட்டுப்புறத்துநகரங்களில் இப்படிஒரு மணமில்லாத பூக்கடையை நாளெல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருந்தாலும்கால்காசுக்குவியாபாரம்ஆகாது.ஜமீன்தார்களும், சமஸ்தானாதிபதிகளும், தொழிலதிபர்களும் கோடைக்கால வாசத்துக்காகப் பெரிய பெரிய பங்களாக்களைக்கட்டிவைத்திருக்கும் மல்லிகைப் பந்தலிலோ ஒவ்வொரு பங்களாவுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய்க்குக் குறையாமல் அலங்கரிப்பதற்கு இந்த மனமில்லாப் பூக்களை வாங்குவார்கள். விடியற்காலையில் ஏழு மணியிலிருந்து பூக்களெல்லாம் தீர்ந்துபோய் பிளவர்ஸ் கார்னரில் கடையை இழுத்து மூடுகிறவரை அங்கே வரிசையாக கார்கள் வந்த வண்ணமாகவே இருக்கும். பார்வைக்கு மட்டும் அழகான மணமில்லாப் பூக்களை வாங்கிச் செல்வதற்கு மனிதர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்து வாழ்க்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் வறுமையின் நலிந்த குரல்கள் ஒலிக்காத அந்த ஊரின் செழிப்பை சத்தியமூர்த்தி வியந்திருக்கிறான். .

பூப்தியின் வீட்டுத் தோட்டத்திலேயே ஏராளமான மலர்கள் இருக்கும்போது, பாரதி பிளவர்ஸ் கார்னரில் கவர்ச்சிப் பூக்கள் வாங்கவென்று அப்போது அங்கே வந்ததாகக் கூறியதை அவனால் நம்ப முடியவில்லை. அதை ஒரு காரியமாக வைத்துக்கொண்டே வேறெதற்காகவோ அவள் அப்போது அங்கே வந்திருப்பதாகத் தோன்றியது. அவள் சொல்லிய காரணத்தைத் தான் நம்பவில்லை என்பது தெரிய மெல்லச் சிரித்தான் அவன்.

“என்ன அப்படிச்சிரிக்கிறீர்கள்?" -

"ஒன்றுமில்லை! இந்த ஊரில் உள்ள அத்தனை வீடுகளையும் அலங்கரிக்கப் போதுமான அவ்வளவு பூக்கள் உங்கள் தோட்டத்திலேயே இருக்கும்போது, நீங்கள் பிளவர்ஸ் கார்னரைத் தேடிக்கொண்டு பூ வாங்க வந்ததாகக் கூறுகிறீர்களே?. அதை நினைத்துத்தான் சிரித்தேன். < * : * > . . . சிறிது நேரம் அவனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திகைத்துத் தடுமாறிய பின் அவள் மெல்லமெல்லத் தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினாள்.

"இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது சார்? மேஜைகளில் உள்ள மலர்க் குடுவைகளில் அப்படியே கொண்டு போய்ச்சொருகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/347&oldid=595536" இலிருந்து மீள்விக்கப்பட்டது