பக்கம்:பொன் விலங்கு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பொன் விலங்கு

விடுவதற்கு வசதியாக மேட்ச் ஆகிற நிறங்களில் பொருத்தமான பூக்களைச் சேர்த்துக் கட்டித் தயாராக வைத்திருக்கிறார்கள் இங்கே வீட்டுத் தோட்டத்தில் நாமாகப் பறித்துச் சேர்த்து அலங்கரிக்க முயன்றால் அதுவே ஒரு பெரிய வேலையாகி விடுகிறது. அப்புறம் படிப்பதற்கு நேரமே இருப்பதில்லை. 'நீங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிற கவர்ச்சியில் மயங்கித் தமிழ் குரூப்'யில் வேறு சேர்ந்தாயிற்று. தண்டியலங்காரத்தையும் புறப்பொருள் வெண்பா மாலையையும் நினைத்தாலே பயமாயிருக்கிறது. அன்றைக்கு நடக்கிற பாடல்களை அன்றே மனப்பாடம் பண்ணிவிடுகிறேன், பாடங்களிலோ அவற்றின் பொருளிலோ ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால்கூடஉங்களைத்தேடிவந்து கேட்டுத் தெரிந்து கொள்ளப் பயப்பட வேண்டியிருக்கிறது. என்னிடம் நீங்கள் ஏன்தான் இவ்வளவு கடுமையாயிருக்கிறீர்களோ, தெரியவில்லை?” என்று அவள் கூறிய பதிலிலிருந்தே அவள் கண்டிப்பாகப் பூ வாங்குவதற்காக மட்டும் அங்கு வரவில்லை என்பதை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. -

"பிளவர்ஸ் கார்னரில் பூவாங்குவதற்காகத்தானே வந்தீர்கள்? அப்படியானால் கடையில் பூக்கள் தீர்ந்து போவதற்கு முன்னால் வாங்கிக்கொண்டு புறப்படுங்கள்." என்று இருந்தாற் போலிருந்து அவசரமாகவும் அவளைப் புண்படுத்துகிற முறையிலும் பேச்சைத் திடீரென்று முறித்துக்கொண்டு மேலே போக முயன்றான் சத்திய மூர்த்தி, மல்லிகைப் பந்தல் கல்லூரியில் ஆசிரியராக வந்து சேர்ந்த மறுநாளிலிருந்து அந்தப் பெண் பாரதியிடம் அவன் இனிமேல் இவளிடம் தீர்மானமாக இப்படித்தான் பழக வேண்டும் என்று முடிவு செய்துகொள்ளக் காரணமாக சில நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்திருந்தன. இரண்டாவது முறையாகத் தனக்குள் நினைத்துப் பார்க்கவும் அருவருப்பான அந்நிகழ்ச்சிகளை திரும்பத்திரும்ப எண்ணி வருந்திக் கொண்டிருப்பதைவிட ஒரேயடியாகத் தன்னைத்தானே மாற்றிக்கொண்டு விடுவது என்று மாறியிருந்தான் జ{Qకీళ.

தன்னைப்போல் எல்லா மாணவர்களையும் கவர முடிந்த ஓர் இளம் பருவத்து ஆசிரியனைக் கல்லூரி அதிபரின் மகளான பாரதி சுற்றிச் சுற்றி வருவதையும், மதிப்பதையும், புகழ்வதையும், மலர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/348&oldid=595538" இலிருந்து மீள்விக்கப்பட்டது