பக்கம்:பொன் விலங்கு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பொன் விலங்கு

இலட்சியம் செய்யாமல் வந்த தினத்தன்று காலையிலே அவன் சொந்தமாகத் தங்குவதற்கு அறை தேடிக்கொண்டு போனதற்கு இதுவும் ஒரு காரணம். வேறொரு நாள் இதே விதமாக வம்பு ஒன்றைப் பூபதியின் வீட்டுத் தோட்டத்தில் நடந்த விருந்தின் முடிவில் மீண்டும் அவனே தன் செவிகளால் கூச்சத்தோடு கேட்டுக்கொண்டு போக நேர்ந்தது.

"பையன் கேட்கிறவர்கள் மயங்க மயங்கப் பிரமாதமாப் பேசறான். அப்பா வாயாலே புகழ்ந்து கொண்டாடுகிறார். மகளோ கையாலேயே கொண்டாடுகிறாள். எழுந்திருந்து ஓடி வந்து அவனுடைய கிண்ணத்தில் தேநீர் ஊற்றிய காட்சியைப் பார்த்தீரோ இல்லையோ?" என்று அன்றைய விருந்துக் கூட்டம் முடிந்து போகும்போது வயது முதிர்ந்தும் மனம் முதிராத பேராசிரியர் ஒருவர் இன்னொருவரிடம் அரட்டைப் பேச்சாகப் பேசிக்கொண்டு போனார். சத்தியமூர்த்திக்கு வேதனை ஒருபுறமும் சிரிப்பு ஒருபுறமுமாக இருந்தன. கல்லூரி எல்லையில் காசிலிங்கனார் வகுளம் வகுளம்' என்று மிஸ் வகுளாம்பிகையைச் சுற்றிச் சுற்றி வருவதையோ வகுளாம்பிகை அடிக்கடி சந்தேகம் கேட்பதாகக் காசிலிங்கனாரைச் சுற்றி வருவதையோ இங்கு யாரும் ஒரு வம்பாகப் பேசுவதில்லை. 'குழந்தைத் தன்மையும் பேதமையும் மாறாத பூபதியின் பெண் என் மேல் அக்கறை காட்டுவது இத்தனை பெரிய வம்புக்குரிய தவறா? அன்பைச் சம்பாதிப்பதில்கூட அப்படிச் சம்பாதிக்கிறவன் மேல் மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கு இடம் இருக்கிறது போலும்! மற்றவர்கள் பொறாமைப்படுகிற விதமான பேரன்பைச் சம்பாதிக்கிறவன் அதனால் சொந்த மனத்தில் நிம்மதியிழந்துதவிக்க வேண்டும் என்பதுதான் உலக நியதியா என்ன? என்று மிக அந்தரங்கமாக எண்ணி எண்ணிச் சில சமயங்களில் மனம் குமைந்திருக்கிறான்சத்தியமூர்த்தி. வெளிப்படத் தெரியாத அல்லது தெரியவிடாத இத்தனை மனப் போராட்டங்களுக்கும் பிறகுதான் அவன் பாரதியிடம் பழகுகிற பழக்கமே மாறியது. ஆனால் பாரதி அவனுடைய மாற்றத்துக்கு இவ்வளவு தீவிரமான காரணமும் திட்டமும் உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவன் ஒரு காரணமும் இல்லாமலே ஏதோ ஒருவகை வெறுப்புடன் தன்னுடன் கடுமையாக மாறிக்கொண்டு வருவதாகத்தான் தோன்றியது அவளுக்கு. அவன் அவ்வளவு வேகமாகப் பேச்சை முறித்துக்கொண்டு மாடிப் படியேறி மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/350&oldid=595544" இலிருந்து மீள்விக்கப்பட்டது