பக்கம்:பொன் விலங்கு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 349

போய்விட முயன்றும்கூட அவள் அவனைப் போகவிடாமல் பேசிக் கொண்டு நின்றாள். தான் பூக்கடைக்காக வந்திருப்பதையே அவள் மறந்து போய்விட்டாற் போலிருந்தது.

"நான் இந்த ஆண்டில், தமிழ் குரூப் எடுக்கவேண்டும் என்று தீர்மானம்செய்துகொண்டதற்குக்காரணமேசொல்லிக்கொடுப்பதற்கு நல்ல ஆசிரியராக நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதுதான். அப்பாவும் என்னை உங்களிடம் தமிழில் நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார். இண்டர்வ்யூ”வுக்கு வந்திருந்தபோது நீங்கள் விளக்கிச் சொல்லிய அந்தத் தமிழ்ப் பாட்டைக் கேட்டுத்தான் நானும் அப்பாவும் உங்களிடம் மனத்தைப் பறிகொடுத்தோம். அதற்குப் பின்னால் நீங்கள் வகுப்பில் நடத்திய "வீ வாக்ஸ் இன் ப்யூட்டி பாடலைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்பாவும் அதைக் கேட்டிருக்கிறார். அன்று மாலை வீட்டில் அதைப்பற்றி என்னிடம் அப்பா புகழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்" என்று அவள் பேசிய பேச்சின் தொனியிலிருந்து இவ்வளவு பிரியமாயிருக்கிற என்னைநீங்கள் இன்னும் எதற்காகச்சோதிக்கிறீர்கள்?' என அவனிடம் கேட்பது போலிருந்தது. தன் செவியில் விழுந்திருந்த அந்த இரண்டு வம்புப் பேச்சுக்களையும் அப்போதே அவளிடம் தெளிவாகக் கூறித் தன்நிலையை விளக்கி விடலாமா என்று எண்ணினான்சத்தியமூர்த்தி, அப்படிவிளக்குவதனால் உலகத்தின்களங்கம் நிறைந்த சிந்தனையின் ஒரு பகுதியை அவள்புரிந்து கொண்டு வேதனைப்படநேருமே என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அந்த வேதனை தன்னோடு போகட்டுமே என்று அவன் தன்னைத்தானே அடக்கிக் கொள்ள் வேண்டியதாயிற்று. ஏற்கெனவே குறிப்பாக அவளிடம் எச்சரித்திருந்த எச்சரிக்கையை இன்னும் வற்புறுத்தி இப்போது கூறலானான்.

என்னைப் போன்ற ஆசிரியர்கள் எல்லா மாணவ மாணவி களுக்கும் பொதுவானவர்கள். எங்களுடைய பாசமும், உரிமையும், அன்பும், எங்களிடம் படிக்கிற அத்தனை பேருக்கும் பாரபட்சம் இல்லாமல் பொதுவானவை. எங்களுடைய சமூகப் பொறுப்பு எப்போதும் பரந்த நோக்கமுடையதாகவே அமைக்கப் பட்டிருக்கிறது. உங்களைப் போல் கல்லூரி நிர்வாகியின் மகள் மட்டுமே அடிக்கடி என்னைத் தேடி வந்து கொண்டிருந்தாலோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/351&oldid=595546" இலிருந்து மீள்விக்கப்பட்டது