பக்கம்:பொன் விலங்கு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 553

அதற்கு ஆளானவளே நேருக்கு நேர் இவ்வளவு குருரமாகக் கண்டு கொள்ளும்படி நடந்துவிட்ட அநாகரிகத்தை எண்ணி மனம் புழுங்கினான் அவன். கிழிந்த கடிதத் துணுக்குகளையும் தன்னையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுக் கண்ணீர் பெருகும் விழிகளோடு சொல்லிக் கொள்ளாமலே அவள் படியிறங்கித் திரும்பிச் செல்லும்போது நடைப் பிணமாகச் செல்வதை அவனும் உணர்ந்தான். இன்றைக்கென்று இந்த நேரம் ப்ார்த்து அந்தக் கடிதங்களைக் கிழிக்க வேண்டும் என்று எனக்கு ஏன்தான் தோன்றியதோ என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான் அவன். -

அன்று காலையில் கல்லூரிக்குப் போனால் அந்தப் பெண்ணின் கலங்கிய விழிகளைத் தைரியமாக எப்படி எதிர் கொள்வது? என்று தயங்கியது அவன் மனம், நீண்ட நேரமாக மேற்கொண்டு ஒரு வேலையும் செய்யத் தோன்றாமல் மலைத்துப்போய் உட்கார்ந் திருந்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்ததும் உற்சாகமில்லாமல் உடை மாற்றிக்கொண்டு ஏதோ கொலைக் களத்துக்குப் புறப்படுவதுபோல் புறப்பட்டிருந்தான் அவன். கல்லூரிப் பாடவேளைகள் தொடங்கி அவன் வகுப்புக்குச் சென்ற போது, அன்று அவள் கல்லூரிக்கே வரவில்லை என்று தெரிந்தது. பாரதி தனக்கு எழுதியிருந்த கடிதங்களை அவளே காணும்படிதான் , துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்திருந்ததை எண்ணி எவ்வளவுக்கு மனம் உடைந்திருப்பாள் என்று நினைத்தபோது சத்தியமூர்த்தி நிம்மதியிழந்து தவித்தான். பாரதி அன்று கல்லூரிக்கே வரவில்லை என்பது வேறு அவனுடைய கவலையை அதிகமாக்கியிருந்தது. கல்லூரியிலோ அந்த மனநிலையோடு அவன் உற்சாகமாகச் செய்ய முடியாத சுறுசுறுப்பான வேலை ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது. நடப்பு ஆண்டில் கல்லூரி யூனியனுக்கு மாணவர்களிலிருந்து ஒரு தலைவனோ, தலைவியோ தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் நடத்தும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிப் பூபதி ஆர்டர் அனுப்பியிருந்தார். கல்லூரி மாணவர் யூனியன் தலைவரையும், இலக்கியச் சங்கம், விஞ்ஞானக் கழகம், விளையாட்டுக் குழு முதலியவற்றுக்கான செயலாளர்களையும் தெரிந்தெடுப்பதற்குரிய தேர்தலை நடத்துவதற்கு சத்தியமூர்த்தி எலெக்ஷன்ஸ்பெஷல் ஆபீஸராகநியமிக்கப்பட்டிருப்பதாகக்காலேஜ்

பொ.வி - 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/355&oldid=595554" இலிருந்து மீள்விக்கப்பட்டது