பக்கம்:பொன் விலங்கு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 பொன் விலங்கு

நோட்டீஸ் போர்டில் வேறு அறிக்கை தொங்கிக் கொண்டிருந்தது. மனத்தில் களிப்பில்லாமல் கடமையைக் காப்பாற்றுவதற்காக அந்தக் காரியங்களை அவன் செய்ய வேண்டியிருந்தது. உதவியாகவோ, ஆதரவாகவோ, அநுதாபத்துடனோ, யாரும் ஒத்துழைக்காத ஒரு சூழ்நிலையில் பொறுப்புகள் மேலும் மேலும் பெருகிக் கொண்டு போவதை எண்ணி அவனுக்குத் தயக்கமாக இருந்தது. முதல்வரும் துணை முதல்வருமாகிய வார்டனும், ஹெட்கிளார்க்கும்-தன்க்கு ஆதரவாக இல்லை என்பதோடு மறைமுகமான எதிரிகளாக இருக்கிறார்கள் என்பது நன்றாக அவனுக்குத் தெரிந்திருந்தது. மற்றவர்கள் எதிரிகளாக இல்லாதது போலவே நண்பர்களாகவும் இல்லை. மாணவர்கள்தான் அவன்மேல் உயிரையே வைத்திருந்தார்கள். ஓர் ஆசிரியன் பெருமைப்பட்டுக் கொண்டு நிமிர்ந்து நடப்பதற்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்? ஆனாலும் இந்த ஒரு பெருமையால் மட்டுமே சத்தியமூர்த்தியின் மனம் நிம்மதியடைந்துவிடவில்லை. இப்படிக் கவலைப்படுவதுதான் தீரர்களின் சுபாவம். -

தீரர்கள் ஒருபோதும் தங்களுக்குப் பக்கத்தில் நிற்கிற ஆயிரம் நண்பர்களால் மட்டும் திருப்திப்பட்டுவிடுவதில்லை. எங்கோ இருக்கிற யாரோ ஒர் எதிரியை அழிக்கவே அவர்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. கல்லூரி முதல்வர் நல்ல எண்ணத்துடனே சுமுகமாகப் பழகுகிறவராக இருந்தால் மாணவர் யூனியன் தேர்தலைப் பற்றிச்சத்தியமூர்த்தியிடம் நேரில் விவரித்துப் பேசி எல்லாம் சொல்லியிருக்க வேண்டும். நிர்வாகியின் வார்த்தையைத் தட்டமுடியாமல் அந்தப் பொறுப்பை சத்தியமூர்த்தி எப்படி நிறைவேற்றினாலும் சரி என்று அவனிடம் விட்டுத் தொலைப்பது போல் முறையைக் கழித்திருந்தார் முதல்வர். தனக்காகத் தன்னை மதிக்காமல் நிர்வாகியின் அபிமானம் தனக்கு இருக்கிறது என்பதற்காகத் தன்னைப் பிறர் மதிப்பதை சத்தியமூர்த்தி சிறிதும் விரும்பவில்லை. - -

கல்லூரி முதல்வரோ புகழ்பெற்ற மேலை நாட்டுச் சர்வகலா சாலைகளில் எல்லாம் பயின்று பட்டம் பெற்றும் தாழ்வு மனப்பான்மையும், பிறர் தன்னைப் படிப்பாளியாக மதித்துப் பயப்படுகிறார்களா இல்லையா என்ற சந்தேகத்துடனேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/356&oldid=595556" இலிருந்து மீள்விக்கப்பட்டது