பக்கம்:பொன் விலங்கு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பொன் விலங்கு

மூழ்கிப்போயிருந்தீர்கள். நீங்கள் எழுந்து நின்று தன்னை மதிக்கவில்லையே என்ற கோபத்துடனும், உங்களைக் கூப்பாடு போட்டு எழுப்ப முடியாத அதைரியத்துடனும் அவர் சுற்றுவதைப் பார்த்து நானே உங்கள் அருகில் வந்து, "சார் ஒரு நிமிஷம் எழுந்து நின்று விடுங்கள். மனிதன் மரியாதைப் பசி பிடித்து அலைகிறான் என்று சொல்லிவிடலாம் போல் தவித்துப் போனேன். நீங்களோ அசைந்து கொடுக்கவில்லை. மனிதன் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ரொம்பக் கோபத்தோடு இங்கிருந்து திரும்பிப் போனார். நான் அப்போதே நினைத்தேன், ஆள் தம்முடைய அறைக்குப் போய் இருந்துகொண்டு இதுமாதிரி ஏதாவது அனுப்புவார் என்று எனக்குத் தெரியும்" என்றார் ஜார்ஜ்.

"அது சரி, மிஸ்டர் ஜார்ஜ் ஆனால் மல்லிகைப் பந்தல் கல்லூரி பிரின்ஸிபாலுக்குத் தருகிற மரியாதையைவிட அதிகமான மரியாதையை நான் ஷேக்ஸ்பியருக்கும் பிராட்லிக்கும் அல்லவா தர வேண்டும்? அவர்களையே நான் உட்கார்ந்து படிக்கும்போது எனக்குத் தெரியாமல் உள்ளே வந்து போன ஒருவருக்காக நான் எப்படி எழுந்து நின்று மரியாதை செய்ய முடியும்? மரியாதை என்கிற விஷயம் எவ்வளவு கஷ்டமானதாக இருக்கிறது பார்த்தீர்களா மிஸ்டர் ஜார்ஜ்? அதை முட்டாள்களும் எதிர்பார்க்கிறார்கள்; அறிவாளிகளும் எதிர்பார்க்கிறார்கள். அதை யாருக்குக் கொடுப்பது என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. உலகத்தில், பிறரிடமிருந்து ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும்போது, அப்படி எதிர்பார்க்கிறவர்களில் சரிபாதிப்பேர் கோழையா யிருக்கிறார்கள்: இன்னும் சரிபாதிப்பேர் முரடர்களாக இருக் கிறார்கள். கோழைகளும் இல்லாமல் முரடர்களுமில்லாமல் வீரர் களாயிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பார்க்கிறபடி எதுவும் இருப்பதில்லை...' என்று சத்தியமூர்த்தி கூறிய கருத்துகளை ஜார்ஜ் மிகவும் ஆர்வத்தோடு கேட்டுப் பாராட்டினார்.

'கொடுப்பவர்கள் தாம் வீரர்கள். எதிர்பார்த்துக் காத்திருப் பவர்கள் கோழைகளே, நம்முடைய பிரின்ஸிபால் எப்போதும் இப்படித்தான் சார் இத்தனை வயதாகியும், இவ்வளவு படித்தும் அவருடைய மரியாதைப் பசி இன்னும் அடங்கவில்லை என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது சார் இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/358&oldid=595560" இலிருந்து மீள்விக்கப்பட்டது