பக்கம்:பொன் விலங்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பொன் விலங்கு

கொண்டதுமில்லை. இருந்தும் செம்மண் நிறத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகி விடுவதுபோல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்து விட்டனவே! இது எவ்வளவு பெரிய அதிசயம்?

'உலகத்தில் தற்செயலாய்ச் சந்தித்து மனம் ஒன்றுபட்ட முதல் காதலர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாய் அதிசயமாயிருந்து வரும் ஓர் அழகிய தத்துவத்தை இந்தப் பாடலில் வரும் காதலன் பேசுகிறான். உள்ளங்கையையும் புறங்கையையும் போலக் காதலையும் வீரத்தையும் ஒரே பொருளின் இரண்டு பக்கங்களாக வைத்துத் தமிழ்ப்புலவர்கள் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் காதல் என்ற தத்துவத்தை மிக நுணுக்கமாகச் சொல்கிற பாட்டு இதைப்போல் வேறொன்றும் இருக்க முடியாது. மனத்தோடு மனம் கலந்து சார்ந்ததன் வண்ணமாக மாறுவதற்குச் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரை உவமையாகக் கூறும் அழகு ஒன்றை மட்டும் வைத்துப் பார்த்தாலும் இந்தப் பாட்டு அட்சர லட்சம் பெறும். இப்போது இந்தச் சிறிது காலம் சந்தித்துப் பழகியதிலேயே யுகம் யுகமாக இப்படி வாழ்ந்துவிட்டுப் பிரிய முடியாமல் தவிப்பதுபோல் நாம் தவிக்கிறோமே? இது என்ன ஆச்சரியம்?' என்று அவன் அவளிடம் கேட்பதுபோல் ஒரு தொனி நயமும் இந்தப் பாடலில் பொருந்தியிருக்கிறது. தாயும், தந்தையும் முன் நின்று முயலாமல், கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல், தம்முள்தாமே, எதிர்ப்பட்டு மனம் ஒன்றுபடுகிற தெய்வீகக் காதலில் 'இது எப்படி நாம் இவ்விதம் ஆனோம்?-என்று இதயம் கலந்த இருவருமே அதிசயப்பட்டு வியந்து கொள்ளும் ஒரு நிலை, உண்டுதான். அந்த நிலையை இந்தப் பாடல் சித்திரித்திருக்கிற விதம் ஈடு இணையற்றது. அந்தப் பாடலில் அவ்வளவு அழகும் நுணுக்கமும் பொருந்திய ஒர் உவமையைச் சொல்லிய திறமையால் இதைப் பாடியவருடைய இயற்பெயர் மறைந்து 'செம்புலப் பெயர் நீரார் என்றே அவருக்குப் பெயர் ஏற்பட்டு நிலைத்துவிட்டது."

சத்தியமூர்த்தி இந்த குறுந்தொகைப் பாடலை விளக்கி விவரித்தபோது பூபதி மனநிறைவோடு புன்முறுவல் பூத்தார். பின்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/36&oldid=595564" இலிருந்து மீள்விக்கப்பட்டது