பக்கம்:பொன் விலங்கு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö64 பொன் விலங்கு

கல்லூரி மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இந்தச் சின்னஞ்சிறு தேர்தல் விழாவுக்கே இத்தனை பரபரப்பும் ஆர்வமும் இருக்குமானால் நாட்டளவில், நகரளவில், ஊரளவில் நடைபெறும் பொதுத் தேர்தல்களும், நகரசபைத் தேர்தல்களும், பஞ்சாயத்துத் தேர்தல்களும், அடிபிடி, குத்துவெட்டு, சொற் கொலை, உயிர்க் கொலை, மரியாதைக் கொலைகளை விளைவிப்பதற்குக் கேட்பானேன்? என்றெண்ணினான் சத்தியமூர்த்தி. இளம் மாணவர்கள் இந்தத் தேர்தலில் கொண்டுள்ள சபலங்களையும், ஆர்வங்களையும் பார்த்தபோது மனித மனத்தின் இயல்பைப் பற்றி நவநீத கவி பாடியிருக்கும் பாடல் வரிகள் சில அவன் நினைவுக்கு வந்தன. திரும்பத் திரும்ப அன்று அவன் இந்தப் பாடலையே நினைத்தான்.

எண்சாண் உடம்பினில் ஐம்புலக் கூடு.வைத்தாய்-அந்த ஐம்புலக் கூட்டினுள்ளே ஆயிரம் நினைவுகளலைந்திட-ஒ ஒற்றை மனம் படைத்தாய் ஒற்றை மனத்தினுள்ளே கற்றைச் சபலங்களாய்ப்-பல காரியச் சுமைகள் கணக்கவைத்தாய் ஆயிரம் நினைவுகள் அலைந்திட-ஒற்றை மனம் படைத்தாய்' என்ற ஒரு வரியை எத்தனை முறை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தாலும் இன்பமாகத்தான் இருந்தது.

தேர்தல் முடிந்தது. கல்லூரி நூல் நிலையத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த போலிங்பூத்தில் கடைசி மாணவனும் தன் வாக்குச் சீட்டைப் பதிவு செய்துவிட்டு வெளியேறிய பின்பு ஜார்ஜும், சத்தியமூர்த்தியும் வாக்குச் சீட்டுகளை எண்ணுவதற்காக உட்புறம் தாழிட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள். அப்போது ஜார்ஜிடம் இந்தப் பாடலைச்சொல்லி இதிலுள்ள கருத்துநயங்களை விளக்கினான் சத்தியமூர்த்தி.

"லைப்பேரியனாக இருப்பதிலுள்ள ஒரே ஒரு தொல்லை, புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற தாகமே இல்லாமல் போய்விட்டதுசார்! நீங்கள் இப்போது இந்தக் கவிதையை விளக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/366&oldid=595578" இலிருந்து மீள்விக்கப்பட்டது