பக்கம்:பொன் விலங்கு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 365

சொல்கிறீர்கள். கேட்பதற்குச் சுவையாக இருக்கிறது. இதே நவநீத கவியின் கவிதைப் புத்தகங்கள் நமது நூல் நிலையத்தில் நிறைய இருந்தும் நானாக இதுவரை எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றவே இல்லை சார்!" என்று பதில் சொன்னார் ஜார்ஜ்.

அப்போது பிற்பகல் நாலரை மணிக்குமேல் ஆகியிருந்தது. ஆறுமணி ஆறரை மணிக்குள் வாக்குச் சீட்டுகளை எண்ணி மாணவர்களுக்குத் தேர்தல் முடிவை அறிவித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு ஜார்ஜும், சத்தியமூர்த்தியும் வோட்டுகளை எண்ண ஆரம்பித்தார்கள். நூல் நிலையக் கட்டிடத்துக்கு வெளியே முடிவை அறிந்துகொள்ளத் தவிக்கும் ஆர்வத்தோடு மாணவர்களும், மாணவிகளும் ஏராளமாகக் கூடியிருந்தார்கள்.

கைகள் வாக்குச் சீட்டை எண்ணிக்கொண்டிருந்தாலும் அந்த இரண்டு மூன்று நாட்களில் பாரதியிடம் ஏற்பட்டிருந்த மாறுதல்களைப் பற்றியே சத்தியமூர்த்தியின் மனம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது. பிளவர்ஸ் கார்னரில் பூவாங்குவதற்காக வந்திருந்த தினத்தன்று, அவள் தன்னைத் தேடி அறைக்குள் வந்து தான் கிழித்தெறிந்திருந்த கடிதத் துணுக்குகளைப் பார்த்துவிட்டு நடைப் பிணமாகத் திரும்பியதையும் பின்பு அன்று முழுவதும் கல்லூரிக்கு வராமலிருந்ததையும் மறுநாள் கல்லூரிக்கு வந்து தன் முகத்தைக்கூட நன்றாக நிமிர்ந்து பாராமலே அபேட்சை மனுவைக் கொடுத்துவிட்டுச் சென்றதையும் ஒருசேரச் சிந்தித்து அவளுள்ளே நிகழ்ந்திருக்கும் மாறுதல்களை அவன் அனுமானிக்க முயன்றான். தான் கடுமையாகவும், நெகிழ்ச்சியின்றியும் இருப்பதைப் புரிந்து கொண்ட பிறகு, அவளுடைய பணிவும், விநயமும் தன்னிடம் மாறியிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

முதன்முதலாகப் பூபதியின் மாளிகையில் இன்டர்வியூவுக்கு வந்திருந்தபோது கிளிகள் எழுதிய திரைச்சீலையை விலக்கிக் கொண்டு, எழுதாத பசுங்கிளியாம் எட்டிப் பார்த்து நாணமும் அழகும் போட்டியிடும் முகத்தோடு தலையைக் குனிந்து கொண்ட பாரதிக்கும், நேற்று முன்தினம் அபேட்சைமனுவைக் கொடுப்பதற்கு வந்திருந்த பாரதிக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. 'அன்பை செலுத்துவதற்கு நம்பிக்கை வாய்ந்த அந்தரங்க மனிதன் இவன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/367&oldid=595580" இலிருந்து மீள்விக்கப்பட்டது