பக்கம்:பொன் விலங்கு.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 369

'வயதினால் சிறு பிள்ளைகளாக இருக்கலாம். அது தவறில்லை. ஆனால் புத்தியினாலும், செயலினாலும் கூடச் சிறு பிள்ளை களாயிருப்பதை மன்னிக்க முடியாது" என்று ஆத்திரத்தோடு அந்த மாணவனையும், அவனைக் கோபமூட்டிய மாணவியையும் கண்டித்தான் சத்தியமூர்த்தி. கூட்டத்தைக் கலையச் செய்து மாணவர் களுக்குள் தேர்வு முடிவு பற்றிய கலகம் மூளாமல் வீட்டுக்கு அனுப்புவதற்கு அவன் அரும்பாடு படவேண்டியிருந்தது. எல்லாரும் கலைந்த பின்பும், பாரதியும், அவள் தோழிகள் சிலரும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி நூல் நிலையத்துக்கு வெளிப்பக்கத்திலிருந்த மைதானத்திலேயே தயங்கி நின்றார்கள். ஒரு நாகரிகத்துக்காகப் பாரதியிடம், கங்ராஜுலேஷன்ஸ் என்று அவளருகே சென்று சத்தியமூர்த்தி வெற்றியைப் பாராட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தபோதுகூட அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"சார் உன்னைத்தான் கூப்பிடறார்டி" என்று பாரதிக்கு அருகில் நின்ற மகேசுவரி தங்கரத்தினம் எடுத்துக் கூறியும் அவள் சத்தியமூர்த்தியை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. சத்தியமூர்த்திக்குச் சுருக்கென்றது. "சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவேண்டும் மிஸ் பாரதி' என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் உள்ளே திரும்பிவிட்டான் அவன். ஆனாலும் அப்போது அவள் நடந்து கொண்ட விதம் அவனுடைய மனத்துக்குள் ஒரு தீராத புதிராகவே இருந்தது. - -

31.

米 - ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திப் பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கு முள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன.

அன்று பகல் மூன்று மணி சுமாருக்குத் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது கல்லூரி ஊழியன்,

பொ. வி. 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/371&oldid=595590" இலிருந்து மீள்விக்கப்பட்டது