பக்கம்:பொன் விலங்கு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பொன் விலங்கு

சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்திருந்தான். அப்போதிருந்த பரபரப்பில் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளத்தான் முடிந்ததே தவிர, அதைப் பிரித்துப் படிப்பதற்கு நேரம் இல்லை. மாணவர் யூனியன் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை எண்ணி முடிவையும் அறிவித்து விட்டுச்சத்தியமூர்த்தி அறைக்குத் திரும்பும்போது சிறிது தொலை வரை கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜும் பேசிக் கொண்டே கூட நடந்து வந்தார். ஜார்ஜ் விடைபெற்றுக்கொண்டு சென்றபின் அறைக்குப்போய்ச் சட்டையைக் கழற்றியபோது தந்தையின் கடிதம் நினைவு வந்தது சத்தியமூர்த்திக்கு உறையைக் கிழித்துக்கடிதத்தைப் படிக்கலானான். அப்பாவின்வழக்கப்படிபிள்ளையார் சுழி முருகன் துணைக்குக் கீழே கடிதம் ஆரம்பமாயிற்று. சங்கிலி பின்னியது போல் எழுத்துகளைச் சேர்த்துச்சேர்த்து நீட்டி இழுத்து எழுதப்பட்ட கூட்டெழுத்துகளால் நான்கு பக்கத்துக்கு ஏதேதோ வளர்த்து எழுதியிருந்தார்.அப்பா, -

'சிரஞ்சீவி சத்தியத்துக்கு அநேக ஆசிகளுடன் கடிதம் தொடங்கியிருந்தது. கண்ணாயிரம் பரம உபகாரியாயிருக்கிறார். வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்கு நகரசபை அனுமதி விரைவில் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கண்ணாயிரம் யாரோ அவருக்குத் தெரிந்த மனிதர் மூலம் நகரசபையில் உள்ள ஒருவருக்குக் கடிதம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தினால் காரியம் சுலபமாக முடிந்துவிட்டது. கொத்தனார்கள் இரண்டு நாட்களாக மாடியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிட வேலைகளுக்காக நிறைய சிமின்ட் தேவையாயிருக்கிறது. சிமின்ட் கண்ட்ரோல் விலைக்குக் கிடைப்பதற்குச் சிரமப்படும்போல் இருக்கிறது. அதற்கும் கண்ணாயிரத்தைத்தான் நம்பியிருக்கிறேன். இவரிடம் சொல்லித்தான் ஏதாவது ஏற்பாடுசெய்ய வேண்டும்.நீ சென்ற மாதம் நூற்று இருபது ரூபாய் மணியார்டர் இங்கே அனுப்பியிருந்தாய். வருகிற மாதத்திலிருந்தாவது கட்டாயம் நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கனுப்புவதற்கு முயற்சி செய், கண்ணாயிரத்தினிடம் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன் கட்டிட வேலைகளுக்குப் போதாதென்று தோன்றுகிறது. மூத்தவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/372&oldid=595592" இலிருந்து மீள்விக்கப்பட்டது