பக்கம்:பொன் விலங்கு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 371

ஆண்டாளுக்குக்கலியாணம் முடித்துவிட வேண்டும் என்று வேறு உன் அம்மா அவசரப்படுகிறாள். எதைச் செய்வதற்குத்தான் அவசரப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கைநிறையப் பணத்தை வைத்துக்கொண்டு அலைந்தாலொழிய ஒரு காரியமும் ஆகாது. வீட்டை இப்போது இடித்துக் கட்டுகிற வேலையை நான் தொடங்கியது நல்லதாயிற்று. இல்லாவிட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மாடி இடிந்து தலையில் விழுந்துவிடும். மாடிச் சுவரை இடித்த மேஸ்திரியே இதைச் சொன்னான். 'நல்ல சமயத்தில் மராமத்து செய்கிறீர்கள். இன்னும் கொஞ்சநாளில் விழுந்துவிடும் என்று அவன் சொன்னதை நீநேரில் பார்த்தாலும் அப்படியே ஒப்புக் கொண்டாக வேண்டியிருக்கும்.

நாற்பது வருடங்கள் பள்ளிக்கூட வாத்தியாராக வாழ்நாளைக் கழித்தவனின் குடும்பமும் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும் எவ்வளவுக்குச் செழிப்பின்றி வறண்டு போயிருக்கும் என்பதற்கு நானே ஒர் உதாரணமாகி விட்டேனடா சத்தியம் என் கண்காண நீயும் அதே வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய்; காலேஜில் வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய் என்று வேண்டுமானால் கொஞ்சம் பெருமைப்படலாம். மாதம் முதல் தேதி பிறந்ததும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டால் மீதமிருக்கிற சம்பளப் பணத்தில் நீ வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிக் காலம் தள்ள வேண்டியிருக்கும். அதை நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. கண்ணாயிரத்திடம் இன்னும் ஐயாயிரம் ரூபாய் கடனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டின் மேலேயே அடமானமாகப் புதிய கடனையும் தரமுயல்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் அவ்வப்போது இங்கே வந்து மதுரையில் தங்குகிற காலங்களில் சந்திப்பதற்குச் சென்றால் என்னிடம் பிரியமாகவே நடந்து கொள்கிறார்.

பணமும், செல்வாக்கும் உள்ள நாலு பெரிய மனிதர்களைப் பழக்கிக்கொண்டால்தான் இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தையும் தடையில்லாமல் சாதிக்க முடிகிறது. டியூசன்களையும்ஒவ்வொன்றாக விட்டு விட்டேன். நேரமில்லாததுதான் காரணம். விடிந்து எழுந்திருந்தால் கொத்து வேலைகளை மேற்பார்க்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/373&oldid=595594" இலிருந்து மீள்விக்கப்பட்டது