பக்கம்:பொன் விலங்கு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 373

...வரவர உன் அம்மாவுக்கு உடம்பு தள்ளவில்லை. பல நாட்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து படுத்து விடுகிறாள். வீட்டுக் காரியங்களை உன் தங்கைகள் தான் ஒடியாடிச் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கும் முன்பு மாதிரி உடல் நிலை திடமாயில்லை. இரண்டு தரம் மாடிக்கு ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குகிறது. இவ்வளவு தளர்ச்சி இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை.ஏதோ காலம் போய்க் கொண்டிருக்கிறது. வந்து திரும்புவதற்குப் பிரயாணச் செலவு வீணாகும். இல்லாவிட்டால் இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற் போல் விடுமுறை வருகிற சமயமாகப் பார்த்து நீ ஒரு தரம் மதுரைக்கு வந்து போகலாம். உன் அம்மாவுக்கும் உன்னைப் பார்க்க வேணும் போலிருக்கிறதாம். முடியுமானால் வந்து போக முயற்சி செய். கல்லூரியில் கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துக் கொண்டு பழகு. யாரிடமாவது ஏதாவது கடுமையாகப் பேசிப் பகைத்துக் கொள்ளாதே. உன் குணம் தெரிந்துதான் உனக்கு இதை எழுதுகிறேன்...' இந்த உபதேசத்துடன் கடிதத்தை முடித்திருக்கிறார் அப்பா. யாரோ மாடிப் படி ஏறி மேலே அறைக்கு வருகிற ஓசை கேட்டது. சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான். தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். பத்து நிமிஷங்கள் அவரை நலம் விசாரிப்பதிலும் அவரோடு பேசுவதிலும் கழிந்தன. சத்தியமூர்த்தி முகம் கை கால் கழுவிக்கொண்டு இரவு உணவுக்காகப் புறப்பட்டபோது, "நானும் வருகிறேன் சார்' என்று சுந்தரேசனும் புறப்பட்டார். - - ..

சாப்பாடு முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, "ஒரு நல்ல ஆங்கிலப் படம் நடக்கிறது. போய் விட்டு வரலாமே" என்று சுந்தரேசன் வற்புறுத்தினார். "ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள், பிரயாணக் களைப்பு வேறு இருக்கும். துக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காகப் படத்துக்குப் போக வேண்டும் என்கிறீர்கள்?" என்று சத்தியமூர்த்தி மறுத்தும் அவர் பிடிவாதமாகப் படத்துக்குப் போக வேண்டும் என்றார். "அந்தப் படம் இன்றைக்குத்தான் கடைசி நாள். நாளைக்குவேறு படம் வந்துவிடுகிறதுசார். இம்பீரியல் ரோம் பீரியடில் அடிமைகள் கொடுமைப்படுத்தப் பெற்றதையும் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/375&oldid=595598" இலிருந்து மீள்விக்கப்பட்டது