பக்கம்:பொன் விலங்கு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 375

மிக நன்றாகச் சித்திரித்திருந்தார்கள். "ஒரு தலைமுறையின் சரித்திரம் பின்னால் வருகிற மற்றொரு தலைமுறைக்குக்காவியமாகி விடுகிறது பார்த்தீர்களா? எதையும் கலையழகுபடச் சித்திரிக்க முடியுமானால் மனிதர்கள் கொடுமையில் வாடித் துன்பப்படுவதைக்கூட கலையழகுபடச் சித்திரிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்து விட்டார்கள்" என்று திரைக் காட்சி முடிந்து வெளியே வந்தபோது சுந்தரேசன் உற்சாக மிகுதியில் ஆர்வம் பொங்கச் சொல்லிக்கொண்டே வந்தார். பூபதியும் அவர் மகளும்கூட அன்று அந்தத் திரைப்படத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. காட்சி முடிந்ததும் சத்தியமூர்த்தியும் சுந்தரேசனும் தியேட்டருக்கு வெளியே கார்களைப் பார்க்' செய்திருந்த பகுதியைக் கடந்து நடந்து கொண்டிருந்தபோது பூபதியும் அவர் மகளும் காரில் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். போகிற போக்கில் பாரதியின் பார்வை ஒருகணம் சத்தியமூர்த்தியின் மேல் தயங்கிவிட்டு விலகியது. அப்படி விலகும்போது கடுமையோடும், அலட்சியமாகவும் விலகுவதுபோல் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற திசையை ஒட்டிச்சுந்தரேசனின் கண்களும் திரும்பின. 'நம்முடைய காலேஜ் கரஸ்பாண்டென்டும் அவர் பெண்ணும்கூட இந்தப் படத்துக்கு வந்துவிட்டுப் போகிறாங்க போலிருக்கே..." என்று வியந்தாற்போல் சத்தியமூர்த்தியின் காதருகே கூறினான் சுந்தரேசன். "ஆமாம்; நானும் பார்த்தேன்' என்று சுவாரஸ்யம் இல்லாமல் அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி, அறைக்குத் திரும்பும்போது குளிர் கடுமையாக இருந்தது. மூச்சு விடும்போது மூக்குத் துவாரங்களின் வழியே புகை வருவதுபோல் தெரிய அங்கும் இங்குமாக இழுத்துப் போர்த்தியபடி விரைந்து கொண்டிருந்தார்கள் மனிதர்கள். -

'அடுத்த மாதச் சம்பளத்திலாவது நீங்களும் நானும் ஆளுக்கொரு எலக்ட்ரிக் ஹீட்டர் வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஊரில் குளிரில் காலம் தள்ளுவது சிரமமாக இருக்கும் போலிருக்கு சார்' என்று சுந்தரேசன் பேச்சுப் போக்கில் ஞாபகப்படுத்தினார். அடுத்த மாதத்திலிருந்துதான் அப்பா நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கு அனுப்ப வேண்டுமென்று எழுதியிருக்கிறார். ஹீட்டர் வாங்குவதற்குப் பணத்துக்கு எங்கே போவது? என்று மனம் நினைத்து வருந்தத் தொடங்கிய அதே வேளையில், "நீங்கள் விரைவில் உங்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/377&oldid=595602" இலிருந்து மீள்விக்கப்பட்டது