பக்கம்:பொன் விலங்கு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 377

விநாடியிலே உரிமையோடு சுந்தரேசனிடம் கேலியில் இறங்கி விட்டான் குமரப்பன். 'மனிதர்களுக்குள்ளே நான் கேலியும் கிண்டலும் செய்யமுடியாத அதிக உயரத்தில் இருப்பவர்கள் யாரும் கிடையாது' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டுவிட்டாற் போன்ற அசகாய சூரத்தனத்தோடு பழகுவான் குமரப்பன். இந்தச் சூரத்தனத்தைக் கண்டு பலமுறை தனக்குள் மலைத்துப் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. சில துறுதுறுப்பான குழந்தைகளுக்கு வேற்று முகமே தெரியாது. எவரிடமும் க்ல்கலப்பாக நெருங்கிப் பழகும் துணிவை அந்தக் குழந்தைகளின் சுறுசுறுப்பிலும் குறுகுறுப்பான பழக்கவழக்கங்களிலும் காணலாம். குமரப்பனும் அத்தகைய சுபாவமுள்ளவன்தான். அவனுடைய குறும்புத்தனத்தில் வஞ்சகம் பழி கிடையாது. குமரப்பனுடைய மூட்டை முடிச்சுகளை அவனும் சத்தியமூர்த்தியுமாக ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சுமந்துகொண்டு மாடிப்படி ஏறியபோது, "என்னடா இரண்டு இரண்டரை மணிநேரம் ஓர் உண்மை நண்பனை இப்படி இந்தக் குளிரில் காத்துக் கிடக்கும்படி செய்து விட்டாயே! இது நியாயமா உனக்கு? பாடனி சார் நீங்களே சொல்லுங்கள்; நான் வருகிற இன்றைக்கென்றா இவன் சினிமாவுக்குப் போவது?" என்று சத்தியமூர்த்தியைக் கேட்டுவிட்டுச் சுந்தரேசன் பக்கமாகத் திரும்பி அவரையும் வம்புக்கு இழுத்தான் குமரப்பன்.

'என்ன கார்ட்டூனிஸ்ட் அவர்களே! இப்படித் திடீரென்று இங்கே புறப்பட்டு வந்துவிட்டீர்களே, வருகிற வாரம் குத்துவிளக்கில் தங்கள் கார்ட்டூன்களைக் காண முடியுமோ, இல்லையோ?”-சத்தியமூர்த்தியின் இந்தக் கேள்விக்கும் குமரப்பன் கூறிய பதில் விநோதமாக இருந்தது.

'கார்ட்டுன் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் வந்திருக்கிறேனடா சத்தியம்! அது ரொம்பவும் சுவாரஸ்யமான கார்ட்டுனாக இருக்கும். ஆனால் அந்தக் கார்ட்டுனைக் குத்து விளக்கில் பிரசுரிப்பார்களா என்பதுதான் சந்தேகமாயிருக்கிறது"

"ஏன் அப்படி?..." - "இத்தனை சுலபமாக உன் கேள்விக்குப் பதில் சொல்லிவிட முடியாது, அப்பனே! இன்றைக்கு 'ஸ்கெட்ச் மட்டும்தான் கொடுக்க முடியும். எல்லாம் நாளைக் காலையில் விவரமாகச் சொல்கிறேன்." என்று கூறிக்கொண்டே ஹோல்டாலை விரித்துப் படுக்கையைப் போடத் தொடங்கியிருந்தான் குமரப்பன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/379&oldid=595606" இலிருந்து மீள்விக்கப்பட்டது