பக்கம்:பொன் விலங்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பொன் விலங்கு

இருந்தார்கள். ஏதோ டெலிபோன் வந்தது. பூபதி பத்து நிமிடங்கள் டெலிபோனில் பேசிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தார்.

"மன்னியுங்கள். உடல்நலம் மிகவும் கெட்டுப்போயிருப்பதால் எனக்கு அதிகத்தளர்ச்சியாக இருக்கிறது.இப்படிச்சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டே நான் உங்களோடு பேசலாமல்லவா?" என்று ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார் அவர் -

"நீங்கள் மல்லிகைப் பந்தலில் எங்கே தங்கியிருக்கிறீர்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி?"

"எங்கும் தங்கவில்லை சார் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே இங்கேதான் வருகிறேன். இன்டர்வியூ முடிந்ததும் மாலையில் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன்."

"இந்த ஊருக்கு வருகிறவர்கள். இதன் இயற்கை அழகையும், சூழ்நிலைகளையும் பார்த்தபின் உடனே திரும்பிச் செல்ல நினைக்கலாமா?”

"நான்தான் இங்கேயே வந்துவிடப் போகிறேனே?" 'நீங்கள் வரவேண்டுமென்று இன்னும் அதிகாரப்பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே?" என்று கேட்டு விட்டுச் சிரித்தார் அவர். சிறிது நேரம் அவர்கள் இருவருக்குமிடையே மெளனம் நிலவியது. தாம் அடுத்தாற் போல் அவனைக் கேட்க விரும்பிய கேள்வியை அவ்வளவு நேரம் இடைவெளி கொடுத்தபின் கேட்பது தான்நியாயம்ென்று கருதியவர் போல் நிதானமாகக் கேட்டார் பூபதி.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி உங்களுக்கு இன்னும் திருமணமாக வில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே? - "இன்னும் இல்லை" என்று சுருக்கமாகப் பதில் சொன்னான்

சத்தியமூர்த்தி. கேள்வி விடாமல் தொடர்ந்தது.

"என்ன காரணமோ?"

'காரணம் எத்தனையோ இருக்கலாம். அவசியம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் முக்கியமான ஒரு காரணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/38&oldid=595608" இலிருந்து மீள்விக்கப்பட்டது