பக்கம்:பொன் விலங்கு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பொன் விலங்கு

சமயமென்று பக்கத்திலிருந்த கண்ணாயிரம், இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்சஆளாகவும் வேற வந்து சேர்ந்திருக்கான் என்று என்னைப் பற்றிச் சொன்னானாம். ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப்பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்ய முடியாது. அந்தச் சுய கெளரவத்தைக் கூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதைவிட நடந்து காட்டிவிடுவது மேல் என்று நடையைக் கட்டி விட்டேன். கண்ணாயிரம் என்ற குரங்கு குத்துவிளக்கு என்ற மலர்மாலையை எடுத்துக் குலைப்பதாக ஒரு படம் வரைந்து அந்தப்படத்தின் மேலே 'குரங்கு கையிலகப்பட்ட பூமாலை' என்றும் எழுதி என்னுடைய ராஜிநாமாக் கடிதத்தோடு சேர்த்து அனுப்பிவிட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். 'ஏன் இங்கே வந்தாய்? என்று நீ என்னைக் கேட்கமாட்டாய். கேட்டால் அதற்கும் பதில் தயாராக வைத்திருக்கிறேன். வேலைக்குத் தலை முழுகிவிட்டு வந்த உற்சாகத்தை யாராவது ஓர் உண்மை நண்பனோடு இருந்து கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. அதை உன்னோடு கொஞ்சநாள் இருந்து கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்திருக்கிறேன்..."

குமரப்பனுடைய பேச்சில் வருத்தத்துக்குப் பதில் உற்சாகம்தான் அதிகமாக இருந்தது. எல்லாவற்றையும் கேட்டபின் சிறிது தொலைவு ஒன்றும் பதில் பேசாமல் சத்தியமூர்த்தி தயக்கத்தோடும் மெளனத்தோடும் நடந்து வந்ததைக்கூடக் குமரப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "என்னடா சத்தியம் பதில் பேசாமல் வருகிறாயே? நான் செய்துவிட்டு வந்தது ஏதோ பெரிய ஆகாத காரியம் என்று நினைத்து நீ அதற்காகத்துக்கம் கொண்டாடுவதாக இருந்தால் நாளைக்கே நான் இங்கிருந்து பஸ் ஏறி விடுவேன். உன்னை நான் அப்படி எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் உன்னிடம் வந்திருக்கிறேன்."

"நீ வந்ததைப் பற்றி நான் எவ்வளவு ஆச்சரியப்படுகிறேனோ அவ்வளவிற்கு மகிழ்ச்சியும் அடைகிறேன் குமரப்பா எனக்கு நன்றாக உன்னைத் தெரியும். இதைப்பற்றி நான் தவறாக எண்ணமாட்டேன். ஆனால் உலகியல் வேறு. நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடி, அதனால் சொந்த வசதிகளை நிறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/382&oldid=595614" இலிருந்து மீள்விக்கப்பட்டது