பக்கம்:பொன் விலங்கு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 383

இருவரும் திரும்புவதற்குள் எழுந்து நீராடிக் கல்லூரிக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். இடைவேளையில் கல்லூரி விட்டதும் தான் வந்துவிடுவதாகவும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து பகல் உணவுக்குப் போகலாம் என்றும் சத்தியமூர்த்தி நண்பனிடம் கூறியிருந்தான். நண்பன் குமரப்பனும் அதுவரையில் அறையில் தங்கி ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி அங்கே இருந்து கொண்டான்.

அன்று வகுப்பில் சத்தியமூர்த்திக்கு ஒரு புதுமையான அநுபவம் ஏற்பட்டது. பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஏதோ மேற்கோளுக்காகப் புறநானூற்றுப் பாடல் வரிகள் சிலவற்றைச் சொல்லி விளக்க வேண்டியிருந்தது. தீதும் நன்றும் பிறர்தர வாரா - நோதலும் தணிதலும் அவற்றோரன்ன என்று அந்தப் பாடலில் தான் சொல்லவேண்டிய மேற்கோளுக்குப் பொருத்தமான அடிகளைக் கூறிவிட்டுத் தீமையும் நன்மையும் பிறர் தருவதனால் வருவதாக நினைப்பது பேதமை; அதைப்போலவே நாம் வருந்துவதற்கும் வருத்தம் தணிவதற்கும் பிறர் காரணமாக அமைவதில்லை..." எனப் பொருளை விளக்கியபோது ஒருநாளும் இல்லாத வழக்கமாகப் பாரதி கேள்வி கேட்பதற்காக நடுவகுப்பில் எழுந்து நின்றாள்.

மாணவர்கள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்க எழுந்து நிற்கும்படி எதையும் அவன் மீதம் விடுவதில்லை. மாணவர்கள் மனத்தில் எந்த எந்த இடங்களில் இயற்கையாக என்னென்ன சந்தேகங்கள் எழ முடியும் என்ற தடைகளையும் தனக்குத்தானே எழுப்பிக்கொண்டு அவற்றுக்கும் சேர்த்து விடைகளைக் கூறி முடிப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். அதனால் அவன் பாரதியை உட்காரச் சொல்லிக் கையமர்த்தினான். அவன் கையமர்த்தியதைக் கவனிக்காததுபோல் முகத்தையும் கடுமையாக வைத்துக்கொண்டு, 'எனக்கு ஒரு சந்தேகம் சார்! அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக நான் இப்போது நிற்கிறேன்' என்றாள் பாரதி. சத்தியமூர்த்திக்கு அவள் முரண்டு பிடிப்பதாகவோ அடம் பண்ணுவதாகவோ தோன்றியது.

"எதைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கிறேனோ அதை நான் இன்னும் முடிக்கவில்லை. மிஸ் பாரதி! நான் முடித்த பிறகு ஒருவேளை உங்கள் சந்தேகம் தீர்ந்து போனாலும் போகலாம். தயவுசெய்து நான் முடித்த பின்பு கேளுங்கள்...' என்று சற்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/385&oldid=595620" இலிருந்து மீள்விக்கப்பட்டது