பக்கம்:பொன் விலங்கு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 பொன் விலங்கு

ஆனால் வகுப்பில் கசமுசவென்ற பேச்சுக் குரல்களும், இரகசிய முணுமுணுப்புகளும் ஒய்வதற்குச் சிறிது நேரமாயிற்று. தன்னிடம் பிரியமுள்ள மாணவி என்று பகிரங்கமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற பாரதி தனக்கு முன்பே நடு வகுப்பில் சந்தேகம் கேட்கப் போவதாக எழுந்து நின்று அடம் பிடித்ததையும், தான் அவளுக்குச் சொல்லிய பதில் கடுமையாக இருந்ததையும் மற்ற மாணவர்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் நினைத்து முணுமுணுக்க முடியும் என்பதை அவன் உடனே அநுமானிக்கத் தவறவில்லை. ஆனாலும் தன்னுடைய நயமான சொல்லாட்சித் திறனால் ஐந்தே நிமிடங்களில் வகுப்பில் பழைய அமைதி நிலவும்படி செய்தான் அவன். இந்த நிகழ்ச்சியை வகுப்பு முழுதும் மறந்து விடும்படி செய்ய அவனுக்குச் சாமர்த்தியம் இருந்தது. ஆனால் தன் மனத்தளவில் அவனால் இதை மறக்கவே முடியவில்லை. அந்த வகுப்பு வேளை முடிந்தபின் அடுத்த வகுப்புக்குப் போய் அதற்கடுத்த வகுப்புக்குப் போன பின்னும்கூட அவனால் அன்று இதை மறக்க முடியவில்லை. இடைவேளையின்போது அறைக்குப் போய்க் குமரப்பனைச் சாப்பிட அழைத்துப் போகவும் இயலாமற் போய்விட்டது. கல்லூரித் துணை முதல்வர் ஹாஸ்டல் விஷயமாக ஏதோ பேச வேண்டுமென்று இடைவேளையில் கூப்பிட்டனுப்பவே அவரோடு போய் உட்கார வேண்டியதாயிற்று. தான் போக முடியாவிட்டாலும் லேக் சர்க்கில் பக்கமாகச் சென்று திரும்பும் மாணவன் ஒருவனிடம் குமரப்பனுக்குத் தகவல் சொல்லி அனுப்பி அவன் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிவந்து அறையில் ஓய்வு கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தான் சத்தியமூர்த்தி.

கல்லூரி முடிந்து அவன் மாலையில் அறைக்குத் திரும்பிச் சென்றபோது குமரப்பன் இருந்தாற் போலிருந்து அவனிடம் ஒரு கேள்வி கேட்டான். -

“ஏண்டா, சத்தியம் எந்தத் தவற்றைப் பிறருக்குத் தெரியாமல் சுலபமாக நம்மால் மறைக்க முடியும் என்று தோன்றுகிறதோ அதைக் கூடப் பிறரிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பது நியாயமென்பதை நீ ஒப்புக்கொள்வாயா..."

"இதென்னது?... இருந்தாற்போல் இருந்து மன்னிப்பைப்

பற்றி," என்று சத்தியமூர்த்தி பேச்சை இழுத்து நிறுத்தித் தயங்கினான். அதற்குக் குமரப்பன் கூறிய பதில் அவனைச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/388&oldid=595626" இலிருந்து மீள்விக்கப்பட்டது