பக்கம்:பொன் விலங்கு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 - பொன் விலங்கு

பெட்டியின் ஒரு மூலையில் அந்தக் கடிதத்தைப் போட்டு வைத்தபோது, பின்னால் என்றாவது, குமரப்பனோ, இன்னொரு நண்பனோ, அதை எடுத்துப் படிக்க நேரிடுமென்று சத்தியமூர்த்தி கனவிலும் நினைத்ததில்லை. குமரப்பன் அதை எடுத்துப் படிக்க நேர்ந்துவிட்டதென்று இப்போது தெரிந்து போனபின்பும் அதற்காக அவன் மனம் உடைந்து போய்விடவில்லை. சிறிது நேரம் திகைப்பும் சிந்தனையுமாக ஒரு பதிலும் சொல்லாமல் மெளனமாயிருந்தபின் சத்தியமூர்த்தி தன் நண்பனை நோக்கி வெகு நிதானமாகப் பேசினான்.

"இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது குமரப்பன்? என் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான பகுதியைத் தெரிந்து கொள்வதற்கு நீ உரிமையற்றவன் என்று சொல்லிவிட முடியுமா?"

'முடியுமோ, முடியாதோ?-உன் அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு அல்லது இல்லை என்று தீர்மானம் செய்யவேண்டியவன் நீதானே? நானாக அந்த உரிமையை எப்படி எடுத்துக்கொள்ள முடியுமடா சத்தியம்."

'அப்படிச் சொல்லாதே குமரப்பன்? எந்த உரிமையையும் தாராளமாக உன்னிடம் விட்டுவிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். உன்னைப்போல் உண்மை நண்பன் ஒருவனிடம் வாழ்வதா-சாவதா என்று சிந்தித்து முடிவு சொல்லும் பொறுப்பைக்கூடப் பரிபூரணமாக விட்டுவிட்டு நீ சிந்தித்து முடிவு சொல்கிறவரை நிம்மதியாகச் சிரித்துக் கொண்டிருக்கலாம்."

"நீ வாழ்வதற்குச் சிந்தித்து முடிவு சொல்லுகிற நண்பனாக மட்டுமே கடைசிவரை இருப்பேன்" என்று கூறிவிட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். சத்தியமூர்த்தியின் மனத்திலும் மோகினியைப் பற்றிய அந்த இன்ப நினைவுகள் இந்த விநாடிவரை தானே சுமந்தாக வேண்டிய தனிச்சுமையாகவும் பாரமாகவும் இருந்தன. தன் மனத்தில் மோகினியைப்பற்றி அலைந்து கொண்டிருந்த சிந்தனையலைகளைக் குமரப்பனைப் போன்ற நெருங்கிய நண்பன் ஒருவனிடம் சொல்லியாக வேண்டிய சந்தர்ப்பம் தவிர்க்கமுடியாமல் தானாகவே நேர்ந்ததை அவனும் வரவேற்றான்.நளினமான இந்த இங்கித நினைவுகளை நண்பனிடம் விவரிப்பதற்கு முன்னால் தான் அங்கு இல்லாதபோது தன்னுடைய பெட்டியிலிருந்து நண்பன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/390&oldid=595630" இலிருந்து மீள்விக்கப்பட்டது