பக்கம்:பொன் விலங்கு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 391

அவற்றையெல்லாம் இப்போது எனக்குச்சொல்லப் போகிறாய் என்று நான்நினைத்துக்கொண்டிருக்கிறேன்.நீஎன்னடாவென்றால் என்னைச் கலபமாக ஏமாற்றிவிடப் பார்க்கிறாய்" என்று குமரப்பன் கேட்கவே சத்தியமூர்த்தி தான் மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் முதல் முறையாக மோகினியின் வீட்டுக்குச் சென்றது தொடங்கி நண்பனிடம் எதையும் மறைக்காமல் ஒவ்வொன்றாக விவரித்தான். அந்த நினைவுகளை நண்பனோடு பேச வேண்டும் என்று அவனே ஆவலாயிருந்த நிலையில் நண்பனும் விரும்பிக் கேட்கவே உற்சாகமாகவும் நயமாகவும் அவனால் அதைச் சொல்ல முடிந்தது. -

மோகினியைப் பற்றி நண்பனிடம் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்த அந்த ஒரு நேரமும் அவன் தனி உலகத்தில் இருந்தான். கடைசியாக அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்ட தினத்தன்று அவள் தன் கையில் அந்த மோதிரத்தை அணிவித்துவிட்டுத் தான் பதிலுக்கு அணிவித்த மோதிரத்தையும் பெற்றுக்கொண்டு கண்ணிர் மல்கும் விழிகளோடு குங்குமச் சிமிழை எடுத்து வந்து தனக்கு திலகமிட்டு விடை கொடுத்த சம்பவத்தைக் குமரப்பனுக்குச் சொல்லியபோது, சத்தியமூர்த்தியின் குரல் தழுதழுத்தது -

"அவள் எனக்கு விடை கொடுக்கும்போது சொல்லிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன, குமரப்பன் என்னை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை என்று கூறி விடைகொடுத்தபோது அவள் கண்களில் தெரிந்த தவிப்ப்ை இன்று நான் வார்த்தைகளால் உனக்குச் சொல்லிவிட முடியாது. நீ இன்று படித்தாயே! இந்தக் கடிதம் நான் இங்கு வந்தபிறகு அவளிடமிருந்து எனக்கு வந்தது மோகினியின் புகைப்படங்களை நீ எனக்கு அனுப்பியிருந்தாயே அப்போது உன் கடிதத்தில் அவளைப் பற்றிப் புகழ்ந்திருந்தாய். மோகினியின் சிரிப்பில் கலைமகளும் திருமகளும் சேர்ந்து வாசம் செய்வதாக நீ புகழ்ந்திருந்த வாக்கியத்தை நான் திரும்பத்திரும்பப் படித்துக் கொண்டாடினேன்." -

சத்தியமூர்த்தி இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது குமரப்பன் நகை மலரும் முகத்தோடு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுச் சிறிது நாழிகை மெளனத்துக்குப்பின் நிதானமாக மறுமொழி கூறினான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/393&oldid=595633" இலிருந்து மீள்விக்கப்பட்டது