பக்கம்:பொன் விலங்கு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 399

எல்லாரிடமும் சாதாரணமாகப் பேசுகிறாற்போல், "ஒய்! பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்கு முன்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா!' என்று குமரப்பனிடம் பேச்சை ஆரம்பித்தார் இவர். அவ்வளவுதான் குமரப்பன் இவரை சரியாக மடக்க ஆரம்பித்து விட்டான். "அப்படியானால் முன்பிறவியில் நன்றாகப் புண்ணியம் செய்தவர்கள் எல்லாம் பாலக்காட்டில் பிறந்து வர்மா கபேயில் அவியல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களென்று சொல்லுங்கள்' என்று அவன் பேசியதில் உள்ள குத்தலை இவர் புரிந்துகொள்ள வெகுநேரம் ஆயிற்று. இன்றும் சத்தியமூர்த்தி வந்தவுடன் குமரப்பனைப் பற்றி ஞாபகமாக விசாரித்திருந்தார் இந்தப் பேராசிரியர். சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தபின் வந்த காரியத்தைப் பற்றி அவரிடம் சொல்லி விவாதிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி.

'வருகிற நவராத்திரி விடுமுறையில் சமூகசேவை முகாமுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் சார்; இங்கிருந்து இருபத்தைந்தாவது மைலில் 'சந்தனச் சோலை' என்று மலைகளுக்கு நடுவே ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் கிளைச்சாலையில் அதிக மழையின் காரணமாக மண்சரிந்து மேவியிருக்கிறதாம். முடிந்த தொலைவுவரை நமது மாணவர்களைக் கொண்டு அந்தச் சாலையை செப்பனிடுவதற்கு 'ஒர்க் காம்ப்-அமைக்கலாம் என்று கருதுகிறேன்."

"ஒய் ஒர்க் காம்ப்'-ஒர்க் காம்ப்' என்று எதற்காக உயிரை விடுகிறீர்கள். பேசாமல் செமினார் காம்ப்' என்று பையன்களோடு நாலைந்து நாள் உல்லாசப் பயணம் போய்விட்டு வரலாம். ஒர்க் காம்ப்"பினால் நமக்கும் தொல்லை, நம்மோடு வருகிற மாணவ மாணவிகளுக்கும் தொல்லை. எவன் ஐயா, வேலை மெனக்கெட்டுக் கூடையையும் மண்வெட்டியையும் பிடித்துக்கொண்டு சிரமப்படுவான். செமினார் காம்ப்' என்று போட்டீரானால் சுகாதாரத்தைப் பற்றியும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதைப் பற்றியும், கல்வி அறிவின் அவசியத்தைப் பற்றியும் கிராமத்தில் இருக்கிற பத்துப் பேரைக்கூப்பிட்டு உபதேசம் செய்துவிட்டுக் குஷாலாகத் திரும்பி வரலாம் ஒர்க்காம்ப்"பில் மாணவ மாணவிகளைக் கட்டிமேய்ப்பதும் பெரிய தொல்லை. சில முரட்டு மாணவர்கள் தன் போக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/401&oldid=595643" இலிருந்து மீள்விக்கப்பட்டது