பக்கம்:பொன் விலங்கு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 409

சத்தியமூர்த்தியைக் கட்டிலருகே இருந்த ஸ்டூலில் உட்காரச் சொல்லிக் கையைக் காண்பித்துவிட்டுப் படுக்கையில் நிமிர்ந்து தலையணை களில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்தாள் அவள். தேனிற் செய்தது போன்ற அவள் குரல் இன்று துயரத்தினால் உடைந்து நலிந்து போயிருந்தது.

'நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உங்களுக்கு இதெல்லாம் தெரியுமோ, தெரியாதோ என்று எண்ணி என் ஆசையை நானே அடக்கிக் கொள்ள வேண்டிய தாயிற்று. என் தவிப்பு வீண்போகவில்லை. நான் எதிர்பார்த்தபடி தெய்வமே உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது." மேலே பேச முடியாமல் அழுகை பொங்கியெழுந்து அவள் குரலை அடக்கியது.

'தெரியாமல் போகுமா? செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தேன்.உடனே நானும் இவனும் புறப்பட்டுவந்தோம். தெய்வமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருப்பதாகச் சற்று முன் நீ கூறினாயே; அந்தத் தெய்வம் இவன்தான்!" என்று சொல்லிக் குமரப்பன் பக்கமாகக் கையைக் காண்பித்தான் சத்தியமூர்த்தி. 'ஒருவருக்கொருவர் புகழ்ந்து கொள்வதற்கும் நன்றி சொல்லிக்கொள்வதற்கும் இதுவா நேரம்? ஆறுதலாக நாலு வார்த்தை பேசிக்கொண்டிரு.நான்வெளியில்போய் இருக்கிறேன்.ஜமீன்தாரும், கண்ணாயிரமும் ஏதாவது நினைத்துக்கொள்ளப்போகிறார்கள்” என்று சொல்லிவிட்டுக் குமரப்பன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் வெளியேறிய சிறிது நேரத்தில் நர்ஸ் கட்டிலருகே வந்து, 'படுத்துக்கொண்டே பேசுங்கள். வீணாக, ஸ்டிரெயின் பண்ணிக்கொள்ளக் கூடாது..." என்று மோகினியை எச்சரித்துவிட்டுப் போனாள்.

"இந்த நர்ஸ் ரொம்ப நல்லவள் இன்று அல்லது நாளைக்கு இவளை விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லலாம் என்றிருந்தேன். நானே எழுத முடியாதபடி கையிலும், தோள் பட்டையிலும் கட்டுப்போட்டுத் தொலைத்திருக்கிறார்கள். இவளிடம் சொல்லி எழுதச் செய்யலாமென்றால், ஒரு நிமிடம் கூடத் தனியாக இருக்க முடியாதபடி பாழாய்ப்போன ஜமீன்தாரும், கண்ணாயிரமும் எனக்கு உபசாரம் செய்கிறேன் பேர்வழியே என்று மாற்றி மாற்றிக் காவல் இருக்கிறார்கள். நல்ல வேளையாக என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/411&oldid=595654" இலிருந்து மீள்விக்கப்பட்டது