பக்கம்:பொன் விலங்கு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதனையும் தவிப்பும் பொறுக்க முடியாமல் தெய்வமே கண் திறந்ததுபோல் நீங்களே தேடிவந்துவிட்டீர்கள், இனிமேல்தான் என் வாழ்க்கையில் வேதனைகளும் சோதனைகளும் அதிகம். இந்தக் கார் விபத்தில் அம்மாவும் டிரைவரும்செத்துப்போனதற்குப்ப்தில் நான் செத்தொழிந்திருந்தால் எவ்வளவோ நிம்மதியாயிருக்கும். இந்த உலகத்தில் யாருமே புரிந்து கொள்ளாத அநாதைப் பெண்ண்ாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாவது எவ்வளவோ மேல். நான் தீர்மானமாகச் செத்துப்போய்விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சாக முயன்று ஒரே ஒரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் குறுக்கிட்டுக் காப்பாற்றிவிட்டீர்கள். -

"அப்படி நீங்கள் என்னைக் கைப்பிடித்துக் காப்பாற்றிய முதல் விநாடியிலிருந்து அல்லது இதை அந்தரங்கமாக நான் எப்படி நினைக்கிறேனோ ஆப்படியே சொல்வதாக இருந்தால் நீங்கள் என்னைக் காப்பாற்றிக் கைப்பிடித்த முதல் விநாடியிலிருந்து நான் உங்களுக்கு மானசீகமாக வாழ்க்கைப்பட்டு விட்டேன். உங்களை நினைப்பத்ற்காக, உங்களை நினைத்துத் தவிப்பதற்காக, உங்களுக்காகத் தவித்து உருகுவதற்க்க-ந்ான் இன்னும் வாழவேண்டும் போலவும் ஆசையாயிருக்கிறது. நீங்கள் நினைப்பதற்கு ஒரே ஒரு பவித்திரமான ஞாபகம்ாகச் சாகவேண்டும் போலவும் ஆசையாயிருக்கிறது. நான் வாழ்ந்து உங்களை நினைக்கவேண்டும். அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும். மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் என்று ஆண்டாளாக அரிதாரம் பூசிக்கொண்டு நாட்டிய மேடையில் கதறிக் கண்ணிர் மல்கி நான் ஆடும் ஒவ்வொரு முறையும் எந்தத் தெய்வத்தை நினைத்துக்கொண்டு ஆடுகிறேனோ, அந்தத் தெய்வம் நீங்கள்தான் "என்னைச் சுற்றிலுமோ, என் வாழ்க்கையைச் சுற்றிலுமோ, உங்களைச் சந்திப்பதற்குமுன் இவ்வளவு சத்தியமான எந்த மனிதரையும் நான் சந்தித்ததில்லை. ஆண்டாள் அரங்கநாதருக்குச் சூடிக் கொடுத்தது போல நான் உங்களுக்குச் குடிக் கொடுத்து வாழ்க்கைப்பட்டிருக்கிறேன்.அன்று ஒருநாள் எங்கள்விட்டு முருகன் படத்துக்கு நான் மாலை சூட்டியப்ோது உங்களை நினைத்துக் கொண்டு உங்களுக்கே சூட்டுவதாகப் பாவித்துக் கொண்டு சூட்டினேன். நான் நினைத்ததும் பாவித்ததும் வீண் போகாமல் அந்த மாலை உங்கள் கழுத்திலேயே நழுவி விழுந்தது. வெள்ளைக்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/412&oldid=595655" இலிருந்து மீள்விக்கப்பட்டது